ஹய்யோ.. நா மிஸ் இல்லப்பா.. மிஸ்ஸஸ் மணிமேகலை..கல்லூரி விழாவில் கலகல!

சென்னை : தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு நகைச்சுவையாக பேசி அசத்தினார் விஜே மணிமேகலை.

Recommended Video

Manimegalai Parithabangal | Hussain கதறல் | Cook with Comali

விஜே மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு வந்தவுடனே பெருமளவில் பிரபலமாகிவிட்டார். முக்கியமாக இவர் பங்கு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை மக்களிடம் எளிதில் எடுத்து சென்றுவிட்டது .

 VJ Manimekalai spoke at the college function

தொகுப்பாளினியாக இருந்து நிகழ்ச்சி பங்கேற்பாளராக மாறியுள்ள விஜே மணிமேகலை. தற்போது அதிகப்படியான நிகழ்ச்சிகளிலும் கல்லூரி விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜே மணிமேகலை. அண்மையில், சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்டு நகைச்சுவை கலந்த பேச்சை கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் .

கல்லூரி விழாக்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் விருந்தினராக அழைக்கப்படுவது சமீபத்தில் மிக அதிகமாக ஆகியிருக்கிறது. இதை தாண்டி பல இடங்களில் டிக்டாக் பிரபலங்களும் அழைக்கப்படுவது குறிப்பிடதக்கது .

 VJ Manimekalai spoke at the college function

மணிமேகலை இந்த கல்லூரி நிகழ்ச்சியில் பேச வரும் போது அங்குள்ள தொகுப்பாளர் தெரியாமல் மிஸ் மணிமேகலை என்று அழைத்துவிட்டார். இதற்கு சிரித்து கொண்டே நான் மிஸ் அல்ல மிஸ்ஸஸ் என்று கூறினார். அப்போது மாணவர்களை பார்த்து இதற்கு ஏன் நீங்க கத்துறீங்க அப்போ கல்யாணம் ஆகாம அப்படியே இருக்க போறீங்களா என்று ஜாலியாக கலாய்த்தார் .

 VJ Manimekalai spoke at the college function

மேலும் அந்த விழாவிற்கு மணிமேகலை மூன்று மணிநேரம் தாமதமாக வந்திருந்தார். அதற்கு மேடையிலே நகைச்சுவையாக விளக்கம் அளித்த மணிமேகலை நான் தாமதமாக வர கூகுள் மேப் தான் காரணம் ஏனெனில் அதை பார்த்து வந்ததால் தான் வழி தவறி சுற்றி சுற்றி வர தாமதமாகி விட்டது என்று கூறினார் .

சமீபத்தில் மணிமேகலை அவர் வீட்டில் சமைக்கும் போது குக்கர் வெடித்தது . இந்த விசயம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. இந்த விசயத்தை விழாவிற்கு சக விருந்தாளியாக வந்த வடிவேல் பாலாஜி நினைவு கூறி மணிமேகலையை கலாய்த்தார் .

இதற்கு பதில் கூறிய மணிமேகலை அன்றைக்கு என்னிடம் காசு இல்லை அதனை தாண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நாம் தான் சிறந்த சமையல் கலைஞராக ஆகிவிட்டோமே என்று நினைத்து சமைத்தேன். அதுஇவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்று எனக்கு தெரியாது என்று கூற மாணவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மணிமேகலை வந்த பணியை சிறப்பாக செய்து மாணவர்களை கலகலப்பாக வைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X