பீரியட்ஸ் ஒரு தீண்டத்தகாத செயல் இல்லை..விஜே நக்ஷத்ரா நாகேஷ் பரபரப்பு வீடியோ!
சென்னை : தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபலமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் விஜே நக்ஷத்ரா நாகேஷை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
பிரபலங்களுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட்டான நிலையில் சில குறும்படங்கள் மற்றும் திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், பெண்களின் பீரியட்ஸ் பற்றி பரபரப்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நக்ஷத்ரா நாகேஷின் வீடியோ இப்போது பரபரப்பாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்களை தெய்வமாக
நாடு என்னதான் பல தொழில்நுட்பங்களால் வளர்ச்சி அடைந்து வந்தாலும் ஒரு சில மூடநம்பிக்கைகள் இந்தியாவில் இன்றளவும் இருந்து வருகிறது. பெண்களை தெய்வமாக போற்றக்கூடிய இதே நாட்டில் அவர்களுக்கு எதிரான சில அவ செயல்கள் இன்றளவும் நடத்தப்பட்டு பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அவலநிலை தொடர்ந்து
பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய அநீதிகளை எதிர்த்துப் பல இடங்களில் பல தலைவர்கள் பல திரைப் பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் குரல் கொடுத்து வந்தாலும் இன்னும் அந்த அவலநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

பூஜை அறைக்குள் செல்ல கூடாது
இந்நிலையில் பெண்களின் பீரியட்ஸ் பற்றி விஜே நக்ஷத்ரா நாகேஷ் கூறியதாவது, வீட்டில் பெண் ஒருவர் முதல் முறையாக பீரியட்ஸ் ஏற்படும்போது அதை மிகப்பெரிய கொண்டாட்டமாக கருதி ஊரைக்கூட்டி இசைக் கச்சேரிகளுடன் தடபுடலாக திருவிழா போல நடத்துகிறோம், ஆனால் அடுத்த மாதமே பீரியட்ஸ் என்றால் அதை ஒரு தீண்டத்தகாத செயலாகக் கருதி பெண்களை கிச்சனுக்குள் செல்ல கூடாது, பூஜை அறைக்குள் செல்ல கூடாது என்ற மூடத்தனமான கட்டுப்பாடுகள் இன்றளவும் இருந்து வருகின்றனர்.

குழந்தை பிறப்பதற்கு
மிகவும் கொடுமையான விஷயம் இதை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன், எனது வீட்டில் இது போன்ற செயல்கள் இதுவரை நடந்ததில்லை, இங்கு பீரியட்ஸ் இல்லை என்றால் நீங்களும் இல்லை நானும் இல்லை குழந்தை பிறப்பதற்கு பீரியட்ஸ் என்பது மிக முக்கியமான காரணமாகும் அப்படி பீரியட்ஸ் இல்லை என்றால் அவ்வுலகில் மனிதர்களே இருந்திருக்க முடியாது.

அருவருப்பாக பார்க்காதீர்கள்
மேலும் தன்னுடைய வீட்டில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு தனது பெற்றோர்கள் எப்போதும் செய்ததில்லை எனவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் தன்னுடைய பெற்றோர்கள் தன் மீது அதிகமாக கேர் எடுத்துக்கொண்டு வருவதாகவும் எனவே பீரியட்ஸ் என்பது ஒரு தீண்டத்தகாத செயல் ஒன்றும் இல்லை இது ஒரு இயற்கை பீரியட்ஸ் இல்லை என்றால் இன்று யாரும் இருந்திருக்க முடியாது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்மணிகளின் பீரியட்ஸைக் கொண்டாடுங்கள் அதை அருவருப்பாக பார்க்காதீர்கள் என நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி நக்ஷத்ரா நாகேஷ் கூடியிருக்கும் இந்த வீடியோ இப்பொழுது பலரின் பாராட்டுக்களையும் பெற்று வைரலாகி வருகிறது. வாழ்த்துக்கள் நக்ஷத்ரா சபாஷ்!!


Click it and Unblock the Notifications











