தேவதை அவள் ஒரு தேவதை… நக்ஷத்திராவின் லேட்டஸ்ட் போஸ்டோஸ்!
சென்னை : விஜே நக்ஷத்ரா நாகேஷ் கலக்கலான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார்.
வாயை மூடி பேசவும், சேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் .

வாணி ராணி தொடரில்
சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர், வாணிராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, ரோஜா, நாயகி, திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், பல சூப்பர்ஹிட் ஷோக்களையும் , பல விருது விழாக்களையும் தொகுத்து வழங்கி அசத்தியிருந்தார் நக்ஷத்திரா.

ஒரு சில படங்களில்
தொடர்களில் மட்டுமே நடித்து வந்த நக்ஷத்திரா, சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்புக்குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். மேலும், ஐ எம் சஃபரிங் ப்ரம் காதல் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
லீட் ரோலில்
நடன இயக்குன பிருந்தா முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகி உள்ள ஹே சினாமிக்கா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராய் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்யாண கோலத்தில்
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். தற்போது இவர், கல்யாண பெண்போல உடையை அணிந்து கொண்டு வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமானோர் தங்களை இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











