VJ Paaru: இர்பான் தப்பான ஆள்.. ஜீரோ.. அவருக்கு யாரும் பேட்டி கொடுக்காதீங்க.. பார்வதி விடமாட்டாங்க போல
சென்னை: யூடியூபர் இர்பான் தான் தற்போது சோசியல் மீடியாவில் அடிவாங்கும் கண்டெண்ட்டாக உள்ளார். ரம்ஜான் தினத்தில், ஏழைகளுக்கு உதவுகிறோம் என அவரும் அவரது மனைவியும் செய்த செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்களது ஏளனச் சிரிப்பும், எகத்தாளப் பேச்சும் இணையவாசிகள் தொடங்கி பல பிரபலங்கள் வரை எரிச்சலை உண்டாக்கியது. இதில் வி.ஜே. பார்வதி வீடியோ வெளியிட்டு இர்பானை ரவுண்டு கட்டி அடித்தார். தற்போது எக்ஸ் பக்கத்தில் இர்பான் கொள்கையாகவே தவறானவர் என பதிவிட்டு மீண்டும் ரவுண்டு கட்டியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
ஏற்கனவே இர்பானின் இந்த செயலுக்கு வி.ஜே. பார்வதி வெளியிட்டிருந்த வீடியோவில், இவரு( இர்பான்) பெரிய ஜமீன் பரம்பரை, காருக்குள்ள உட்கார்ந்து கொண்டுதான் இல்லாத மக்களுக்கு சேவை செய்வார். தனது மனைவியை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தால், அவரது மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டியதுதானே!. இது போன்ற சமூக நடவடிக்கைகளுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கவே கூடாது. மக்களே!, தயவு செய்து மறைந்த ரத்தன் டாடாவை படியுங்கள். ரத்தன் டாடா தனது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை பெருமளவில் இல்லாத ஏழைகளுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதை அவர், எந்த ஒரு இடத்திலும் வெளியே சொன்னதில்லை.

ஆனால், இந்த புது பணக்காரங்க இருக்கானுங்க பாருங்க... எப்பா.. இவனுங்க பண்ற கூத்து இருக்கே!. தன்னிடம் பணம் இருக்கிறது என்பதை எப்படி எல்லாம் கேவலமாக வெளிக்காட்டுகிறார்கள். இப்படியான நேரங்களில்தான் இந்த புது பணக்காரர்களின் புத்தி வெளியே வருகிறது. பெரும்பான்மையான சமூகம் இதுபோன்ற கேவலமான மனநிலையோடுதான் உள்ளது. இந்த மாதிரியானவர்களை நாம் புரோமோட் செய்து கொண்டு இருக்கிறோம்" என வீடியோவில் தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு: விஜே. பார்வதி மட்டும் இல்லாமல், வலைபேச்சு அந்தணன் தொடங்கி பலரும் இர்பானை ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்கள். இதில் அந்தணன் நீ கொடுக்கும் 50 ரூபாய்க்கு இவ்வளவவு திமிர் பேசுவையா என்றெல்லாம் கேட்டுவிட்டார். இது மட்டும் இல்லாமல் தமிழில் இருக்கும், மக்களிடம் வரவேற்பைப் பெற்ற பல முன்னணி யூடியூப் சேனல்கள் தொடங்கி, பல முன்னணி யூடியூபர்கள், பிரபலங்கள் என பலரும் இர்பானை வறுத்தெடுத்தார்கள். இதனால் இர்பான் தான் செய்தது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே வருத்தம் தெரிவிக்கிறேன் எனக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனாலும் நெட்டிசன்கள் விடவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

தவறானவர்: ஏற்கனவே வீடியோவில் ரவுண்டு கட்டி அடித்த வி.ஜே. பாரு, தற்போது எக்ஸ் பக்கத்தில் இர்பானை தாளித்து எடுத்துள்ளார். அதாவது, " பிரபலங்கள் இர்பானுக்கு ஏன் பேட்டி கொடுக்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ரொம்பவும் காசு பார்க்க கூடிய ஆள். பேட்டிக்குள் எப்போதும் தனது பிராண்டை புரோமோட் செய்து கொள்ளக் கூடியவர். பிரபலங்களின் பிரபலத்தை கொண்டு தன்னை மக்களிடத்தில் கொண்டு செல்ல நினைப்பவர். பேட்டி எடுப்பதற்காக முன் தயாரிப்பே இல்லாத ஆள். தொழில் ரீதியாக தவறாக இருப்பவருக்கு எப்படி பேட்டி கொடுக்கிறீர்கள்?" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











