"விஜே பப்பு" ஹீரோவாகிறார்.. பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு !
சென்னை : விஜய் டிவியில் பல்வேறு பிரபலமான நிகழ்ச்சிகளை தனித்துவமான முறையில் தொகுத்து வழங்கி கலகலப்பாக கொண்டு செல்பவர் விஜே பப்பு.
தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.
சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஜொலிக்கயிருக்கும் பப்பு இப்பொழுது ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருக்க படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சிறுவயதில் மிகவும் துருதுருப்பாக
எந்த ஒரு திரைப் பின்புலமும் இல்லாமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல சேனல்களில் விஜே-வாக பணியாற்றி வந்த பப்பு இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆசி பெற்றவர். சிறுவயதில் மிகவும் துருதுருப்பாக சேட்டைகள் செய்துகொண்டிருந்த இவரை பார்த்த பாலுமகேந்திரா இவருக்கு பப்பு என பெயர் சூட்டி அழைத்தும் வந்துள்ளார்.

அடுத்த சிவகார்த்திகேயன்
பார்க்க பக்கத்து வீட்டு பையன் போலவே தோன்றும் பப்பு பெயருக்கு தகுந்தார் போல் மிகவும் சுட்டித்தனமான கள்ளம் கபடமில்லாமல் பேசும் பண்புடையவர். ஆரம்ப கட்டத்தில் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து விடா முயற்சித்து "ரிவ்யூ ராஜா" என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தனித்துவமான முறையில் தொகுத்து வழங்கி மக்களிடம் மிகவும் பிரபலமானார் . ரிவ்யூ ராஜாவில் திரைப்படங்களை செம க்யூட்டாக யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்து தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த இவரை அப்போதே பலரும் அடுத்த சிவகார்த்திகேயன் என புகழ்ந்தனர்

சின்னத்தம்பி
இவ்வாறு பல கட்ட போராட்டத்திற்கு பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு சேட்டைகள் செய்து அனைவரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தார். மேலும் சின்னத்தம்பி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

வணக்கம் தமிழா மூவிஸ்
இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து பல பிரபலங்கள் இப்பொழுது திரையிலும் ஜொலித்துக் கொண்டிருக்க சிவகார்த்திகேயன், டிடி, ரம்யா, மாகாபா, ரோபோ ஷங்கர் ஆகியோரின் வரிசையில் அடுத்த ஸ்டாராக விஜே பப்பு கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருக்க பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வணக்கம் தமிழா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை வணக்கம் தமிழா சாதிக் தயாரித்து இயக்குகிறார்.

பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது
டார்க் ஃபேண்டஸி ஜானரில் இந்த படம் உருவாக ப்ரொடக்ஷன் நம்பர் 1 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. மேலும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் ஜீவி படப் புகழ் பாபுதமிழ் எழுதி இருக்கிறார். விஜே பப்பு, கன்னிமாடம் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதர நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











