ஜாக்கெட் போட்டு வந்தாலும்.. டெய்லர் அக்கா, இர்பான் பற்றி பிரியாணி மேன் சர்ச்சை.. விஜே பாரு பதிலடி!

சென்னை: சாமானியர்களும் தங்கள் திறமையை சோஷியல் மீடியா மூலம் காட்டலாம் என யூடியூபில் அவர்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் பல யூடியூபர்கள் தோன்றி சினிமா விமர்சனம் முதல் உணவு விமர்சனம் வரை எல்லா விஷயத்துக்கும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

சுதந்திரத்தை சுயநலமாக பயன்படுத்தி சிலர் நாட்டையே கெடுத்து வருவதை போல சோஷியல் மீடியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன்மம் காரணமாக யூடியூபர்கள் மத்தியிலும் தற்போது சண்டை வெடித்துள்ளது.

Biriyani Man Tailor Akka Vj Parvathy


யூடியூபில் வீடியோக்களை போட்டே கோடிக் கணக்கில் சம்பாதிக்க முடிகிறதா? என ஆச்சர்யப்பட்டு யூடியூப் வீடியோக்களை போடும் நபர்களின் முகத்திரையை கிழிக்கிறேன் என்கிற பெயரில் சிலர் கிளம்பிய நிலையில் தான் பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்துள்ளது.

தற்கொலை முயற்சி: யூடியூபரும் குக் வித் கோமாளி போட்டியாளருமான இர்பான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் எனும் அபிஷேக் வைத்து வந்த நிலையில், அவருக்கு எதிராக இர்பானும் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இர்பான் தான் காரை ஓட்டி மூதாட்டி மீது விபத்தை ஏற்படுத்தினார் என பிரியாணி மேன் வம்பிழுத்திருந்தார். அடுத்து டெய்லர் அக்கா என யூடியூபில் டிரெண்டாகி வரும் தயாளு என்கிற இளம் பெண் மீதும் குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் அடுக்கியிருந்தார். அவருக்கு எதிராக சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், திடீரென நள்ளிரவில் வீட்டில் லைவில் தூக்கிட்டுக் கொல்லப்போவதாக வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.


பிரியாணி மேன் கைது: இந்நிலையில், செம்மொழி பூங்கா தொடர்பாக பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோவுக்கு எதிராக புகார் கிளம்பிய நிலையில், சைபர் கிரைம் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஜே பார்வதி ஒரு வீடியோவை வெளியிட்டு பிரியாணி மேனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஜாக்கெட் போட்டு வந்தாலும்: தனது டெய்லர் தொழிலை மேம்படுத்த ஜாக்கெட் போட்டு வந்து வீடியோ வெளியிட்டாலும், நீங்கள் அதை தப்பாக பார்க்கக் கூடாது என்றும் ஆபாசமாக வீடியோக்களை வெளியிட்டு சம்பாதிக்கிறார் என சொல்லக் கூடாது என்றும் வீக்கர் செக்ஸ் ஆன பெண்களை பற்றி தான் இழிவாக பேசிட்டி இருக்கிறார். லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொள்வது போல பூச்சாண்டி காட்டலாமா? இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? இர்பானை பிரியாணி மேன் வம்பிழுத்தது, பிரியாணி மேனை இர்பான் வம்பிழுத்தது இதற்கு A to D கருத்து சொன்னது என அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேசி விஜே பார்வதி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியா முழுவதும் ஏகப்பட்ட யூடியூபர்கள் தற்போது இதைப் பற்றித்தான் பெரிதாக விவாதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X