ரெட் கார்டு பெற்ற விஜே பார்வதி.. வெளியே வந்து ரியாக்ஷன் இதுதான்.. இறங்கி அடிச்சிருக்காங்களே

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் சான்ட்ராவை எட்டி உதைத்ததன் காரணமாக விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள். பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரு பெண் போட்டியாளர் ரெட் கார்டு பெற்றது இதுவே முதன்முறைய் ஆகும். இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றது. விஜய் சேதுபதியையும், பிக்பாஸையும் சோஷியல் மீடியாவில் கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதி அல்லது கம்ருதீன் டைட்டிலை அடிப்பார்கள் என்று கருதப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில்; காரிலிருந்து சக போட்டியாளர் சான்ட்ராவை எட்டி உதைத்தார் பார்வதி. அதற்கு கம்ரூதின் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி உதவியும் செய்தார். தான் எட்டி உதைக்கப்பட்டதால் கீழே விழுந்த சான்ட்ரா; பேனிக் அட்டாக்காலும் பாதிக்கப்பட்டார். உடனே மருத்துவ குழு வந்து சிகிச்சை அளித்து அவரது உடல்நலத்தை தேற்றினார்கள்.

அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு: பார்வதியும், கம்ருதீனும் அப்படி செய்ததை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் அனைவருமே கொதித்தெழுந்தார்கள். ஒன்றுமே செய்யாத பிரதீப் ஆண்டனிக்கெல்லாம் ரெட் கார்டு கொடுத்தார்கள். இவ்வளவு வன்மத்தோடும், அராஜகத்தோடும் நடந்துகொண்ட இவர்களுக்குத்தான் ரெட் கார்டு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள். அதனையடுத்து அதிரடியாக அவர்கள் இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்கள்.

VJ Parvathi Instagram Reaction After Bigg Boss Red Card Eviction Goes Viral
Photo Credit:

காலில் விழுந்த கம்ருதீன்: தாங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து அவ்விருவரும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். 'வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அளவுக்கு ஒரு தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு' என பார்வதி கூறினார். அவரைத் தொடர்ந்து கம்ருதீனோ; மொத்தமாக இறங்கி வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டீல்ருந்து வெளியேறினார். இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டாலும்; அதையும் பலர் நடிப்பு என்றே சொன்னார்கள்.

பாவம் கம்ருதீன்: ரெட் கார்டு வாங்கி வெளியேறியதால் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளம் கிடையாது என்று ஒரு பேச்சு ஓடுகிறது. ஆனால் சம்பளம் எல்லாம் கொடுத்துவிடுவார்கள்; இத்தனை நாட்கள் அந்த வீட்டுக்குள் உருவாக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்றதற்கான பலன்கள்தான் கிடைக்காது எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி கம்ருதீனுக்கு ஏற்பட்டிருக்கும் நெகட்டிவ் இமேஜ் காரணமாக அவரை சில சீரியல்களிலிருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் தூக்கிவிட்டார்கள் என்றும் தகவல் ஓடுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சின்ன கோபம் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

விஜே பார்வதியின் ரியாக்‌ஷன்: இந்நிலையில் பலத்த எதிர்ப்புகள், கண்டனங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் வீட்டிலிருந்து வெளியே வந்த பார்வதியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே எழுந்திருந்தது. தற்போது அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் வரிசையாக ஸ்டோரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், பார்வதிக்கு ஆதரவாக பலரும் சொன்ன கருத்துக்களும், பேசிய வீடியோக்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதை பார்த்த ரசிகர்களோ, வெளியே வந்த பார்வதி தனது ரசிகர்கள் கூறிய கருத்தை இன்ஸ்டாவில் வைத்து, தனக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X