கையில் பீர் பாட்டிலுடன்.. இந்தோனேஷியாவில் பார்ட்டி பண்ணும் பிரபல தொகுப்பாளினி.. ஒரே மஜா தான்!
சென்னை: விஜே பார்வதி இந்தோனேஷியாவுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் விஜேவாக உள்ள பார்வதிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு மேலும், ரசிகர்களை அதிகரித்த விஜே பார்வதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் அட்வைஸ் செய்யும் ஆசாமியாக சென்று வந்தார்.

அடிக்கடி ஜாலியாக டூர் அடிக்கும் பழக்கம் கொண்ட பார்வதி கையில் பீர் பாட்டிலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
படங்கள் மற்றும் வெப்சீரிஸ்: ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வரும் விஜே பார்வதி சில படங்களிலும் ஒரு வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். கருங்காப்பியம், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்த விஜே பார்வதி, இந்த ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகா ரோபாவாக நடித்த My3 வெப்சீரிஸில் ஹன்சிகாவின் தோழியாக நடித்து இருந்தார்.
இந்தோனேஷியா டூர்: இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள விஜே பார்வதி தற்போது இந்தோனேஷியாவில் ஜாலி டூர் அடித்து வருகிறார். அங்கே அவர் மலையின் மீது ஏறி செம ரிஸ்க்கான போஸ் ஒன்றை கொடுத்து ரசிகர்களை பதைபதைக்க வைத்துள்ளார். மேலும், இந்தோனேஷியாவின் இயற்கை அழகை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக பல போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பீர் பாட்டில்: காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு அவர் எடுத்த புகைப்படத்தையும் அந்த போட்டோ டம்ப்பில் ஷேர் செய்துள்ளார் விஜே பார்வதி. வெறும் பீர் மட்டும் தானா? ஹாட் எல்லாம் கிடையாதா? என்றும் அய்யோ பார்வதி பீர் குடிக்குது என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
போட்டிங்: இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள விஜே பார்வதி அங்கே போட்டிங் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். விஜே பார்வதியின் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் ஃபயர் எமோஜிக்களையும் வழக்கம் போல கலாய் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











