VJ Parvathy : தமிழ்க்கடவுளை அவமதித்த விஜே பார்வதி.. இது கடவுளுக்கே அடுக்காது.. கொந்தளித்த பேன்ஸ்!

சென்னை : கவர்ச்சி உடையில் சாமி பாட்டு வீடியோ வெளியிட்ட விஜே பார்வதியை ரசிகர்கள் கண்டபடி திட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.

மதுரையில் பிறந்து வளர்ந்த விஜே பார்வதி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி, தற்போது வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருடையே அழகான தமிழ் உச்சரிப்புக்கும், கலகலப்பான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

vj parvathy insulted hindu god, fans are upset

விஜே பார்வதி : செய்தியாளரான விஜே பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்டவர். இவரின் அதிரடியான பேச்சை பார்த்து இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர், கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

திறமையானவர் : யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

vj parvathy insulted hindu god, fans are upset

ஏராளமான ரசிகர்கள் : இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் பேசி வருகிறார். இதனால், இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

vj parvathy insulted hindu god, fans are upset

இது கடவுளுக்கே அடுக்காது : இந்நிலையில், விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சி உடையில் இருக்க அதன் பின்னணியில் கந்தசஷ்டி பாடலைப் போட்டு பலரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் இந்துக்கடவுளை இப்படி அவமதிக்கலாமா, அரைகுறை உடைக்கு இந்த பாடல் தான் கிடைத்ததா என்றும், இது கடவுளுக்கே அடுக்காது, தயவு செய்து இந்த வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள் என்று இணையத்தில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X