உனக்கு வெட்கமே இல்லையா? என் உடம்பு உனக்கு என்ன.. சரியான பதிலடி கொடுத்த விஜே பார்வதி!

சென்னை: க்யூட்டாக கண்ணாடி போட்டுக்கொண்டு அழகாக இருக்கும் வி ஜே பார்வதிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வி ஜே பார்வதியை மோசமான கமெண்டுகளால் விமர்சித்த இணையவாசிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி, தற்போது சென்னையில் செட்டிலாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாக தொகுப்பாளினி என்றால் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்ற விதியை உடைத்து அழகான மதுரை தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதிக்கு செய்தியாளராக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார். மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்ட இவரின் அதிரடியான பேச்சுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கு.

vj parvathy photo

விஜே பார்வதி: கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். யூடியூப் தளங்களில் பல்வேறு யாருமே பேசாத டாப்பிக்கில் பேசி அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதைத்தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்தார். இருந்த போது தாக்கு பிடிக்க முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

வெட்கமா இல்லையா: சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த நெட்டிசன் மோசமான கருத்தை பகிர்ந்தாலும் அதைப்பற்றி பார்வதி கவலைப்படுவதே இல்லை. தற்போது விஜே பார்வதி இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசி உள்ளார். அப்போது, இணையவாசி ஒருவர், இப்படி எல்லாம் மோசமா டிரஸ் போடுறியே உனக்கு வெட்கமாவே இல்லையா என கேட்டுள்ளார்.

எனக்கு அழகான உடல் இருக்கு: இதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ள விஜே பார்வதி, எனக்கு வெட்கமாவே இல்லை, எனக்கு அழகான உடம்பு இருக்கு, பெண்கள் எப்போது அழகான உடல் அமைப்பை கொண்டவர்கள் தான். கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் மார்பகம் தெரியும்படி தான் கோவில் சிலையில் இருக்கும் சித்திரங்கள் இருக்கிறது. அப்படி அந்த சிலையை நீங்க தெய்வீகமாக பார்க்கும் போது, ஒரு பெண் மார்டன் உடை அணியும் போது மட்டும் உங்களின் பார்வை ஏன் தப்பாக போகிறது. இதுபற்றி நான் பல இடத்தில் பேசி இருக்கிறேன் இருந்தாலும், இப்போதும் சொல்கிறேன் ஒரு பெண்ணோட ஆடையை வைத்து அவளை தவறாக பேசாதீர்கள். ஆண்கள் லுங்கியோடவையும், பட்டாப்பட்டி டவுசரோடும் வந்தா ஆண்களை ஆபாசமான வார்த்தையால் நாங்க அசிங்கமா சொல்லட்டுமா என்று சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X