ச்சீ.. என்ன கேவலமான புத்தி.. பெண்களை இப்படித்தான் பாப்பீங்களா? நெட்டிசனை விளாசிய பார்வதி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் மோசமாக கமெண்ட் செய்த நபரை விஜே பார்வதி கடுமையாக விளாசி தள்ளி உள்ளார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார்.

ஆர்ஜேவாக இருந்த பார்வதி கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர் இவர்.
க்யூட்டான விஜே: ஆர்ஜேவான பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல திரைப்பிரபரலங்களை பேட்டி எடுத்து வருகிறார். யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பி வருகிறார்.
அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்தார். மேலும், ஹிப்பாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து நடிகை என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
இணையத்தில் ஆக்டிவ்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வீட்டில் வொர்க் அவுட் செய்யும் போட்டோவை,குட்டை கவுனை அணிந்துகொண்டு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் இவரை ரசிகர்கள் 'குட்டி மியாகலிபா’ எனவும் அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
படுமோசமான கமெண்ட்: இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் ஆபாசமான கருத்தை பகிர்ந்து இருந்தார். இந்த கமெண்டை பார்த்து டென்ஷனான பார்வதி, பெண்களை எப்போதும் ஒரு காமப்பொருளாகவும், கவர்ச்சி பொருளாகவும் தான் பாப்பீங்களா? இதற்கு நாங்க போடும் ஆடைகள் அப்படி இருப்பது தான் காரணம் என்று சொல்கிறீர்கள்.
இந்த மனநிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை. ஆனால், நான் என்ன உடை போடவேண்டும் என்று நீ எனக்கு சொல்லத்தேவையில்லை. பெண்கள் கவர்ச்சிக்காக மட்டும் தான் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றுங்கள் என்று பார்வதி நெட்டிசனை விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











