விஜே பாரு சைஸ்ல ஒரு யானை.. புத்தாண்டு பெளர்ணமி பார்ட்டி போட்டோக்களை போட்டு அலப்பறை கிளப்புறாரே!
சென்னை: விஜே பார்வதி கடந்த ஆண்டு க்ரூப் டூர் ஆரம்பித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன்னுடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மேலும், ரசிகர்களை அவருடன் சுற்றுலா வருவதற்கு ஏற்ற வகையில் பல ஏற்பாடுகளை செய்ய ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பார்வதியுடன் வெளியூர்களுக்கும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.
புத்தாண்டு பெளர்ணமி கொண்டாட்டத்தை முன்னிட்டு தாய்லாந்துக்கு சென்ற விஜே பார்வதி அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

யானை ஒன்றுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
செம போல்டான விஜே: தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வரும் விஜே பாரு போல்டான டாபிக்குகளை எடுத்துப் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். மேலும், ஜீ தமிழ் நடத்திய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்க அதில் போட்டியாளராகவும் இவர் பங்கேற்றார்.

பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோவுக்கு கெஸ்ட்டாகவும் வந்திருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டூர் வீடியோக்களுக்கு அதிகளவில் லைக்குகள் குவிந்து வருகின்றன. சுமார் 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்து வரும் நிலையில், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராகவும் இவர் வலம் வருகிறார்.

அவர் சைஸுக்கு ஒரு யானை: தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற விஜே பாரு அங்கே வாட்டர் ரைடு சென்றது, யானைகள் சரணாலாயத்துக்கு போனது, புத்தர் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது என ஏகப்பட்ட இடங்களை தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு சுற்றிக் காட்டினார். அவர் சைஸில் இருந்த குட்டி யானை ஒன்றுடன் நின்றுக் கொண்டு அதை தொட்டுப்பார்த்து விளையாடிய வீடியோவையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது கவர்ச்சி செல்ஃபிக்களை எல்லாம் பார்த்து ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடுத்த டூர் எப்போ?: ஹன்சிகாவுடன் இணைந்து மை3 வெப்சீரிஸில் நடித்த விஜே பாரு தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தால், வாழ்க்கை ரொம்ப சின்னது என்றும் இதில் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற முடிவில் தொடர்ந்து டூர் அடிக்க முடிவு செய்துவிட்டார். அடுத்து எங்கே டூர் போகலாம்னு கமெண்ட் பண்ணுங்க என்றும் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











