Bigg Boss Tamil 6: அச்சச்சோ.. அவங்களா.. பிக் பாஸ் வைல்டு கார்டா வரப்போவது யாரு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி எவிக்ட் ஆகி உள்ள நிலையில், அடுத்ததாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமான விஜே ஒருவர் தான் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் எனக் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஒரு அசீம் போதாதா? லேடி அசீம் வேற வரணுமா என நெட்டிசன்கள் இப்பவே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஒரு விஜே அவுட் ஒரு விஜே இன்
இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வீட்டில் இருந்து விஜே மகேஸ்வரி வெளியேறி உள்ள தகவல்கள் கசிந்து விட்ட நிலையில், அடுத்ததாக இன்னொரு விஜே அதிரடியாக வைல்டு கார்டு என்ட்ரியாக வரப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

ஜிபி முத்து இல்லை
ஜிபி முத்து மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக வருவார் என ரசிகர்கள் பெரிதும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த நிலையில், அஜித் படத்திலேயே அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது. இனிமேல் ஜிபி முத்து ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறார் என அவரது ஆர்மியினர் கெத்துக் காட்டி வருகின்றனர்.

வைல்டு கார்டு யார்
இந்நிலையில், விஜே பார்வதி வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே பார்வதி. தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் விஜே பார்வதி இன்ஸ்டாகிராமிலும் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு தனக்கான ரசிகர்களை சேர்த்து வருகிறார்.

அப்பவே அப்படி
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலேயே விஜே பார்வதி அப்படி பேசுவார். அப்பவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டியவரை போய் ஏன்ப்பா சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க என ரசிகர்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில், வரும் வார மத்தியில் அதிரடியாக விஜே பார்வதி வைல்டு கார்டு என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











