தொகுப்பாளினியின் திரை பயணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட் - பூஜா ராமசந்திரன்

சென்னை: பிரபலமான மியூசிக் சேனலானா எஸ் எஸ் மியூசிக்கில் ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று பல திரைப்படங்களில் நடித்து ஒரு வெற்றியாளராக இருப்பவர் பூஜா ராமசந்திரன்.

தற்போது பூஜா மிகவும் பிரபலமான ஒரு வெப் சீரிஸ் தொடரான போலீஸ் டைரி 2.0 என்ற இணைய தொடரில் ஒரு ஸ்பெஷல் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் அவரின் திரைப்பயணத்தில் ஒரு மாபெரும் வெற்றியாக அமையப்போகிறது.

VJ Pooja turns out to be a special cop in web series

பூஜா கோவையில் உள்ள CSI பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடிக்கும் முன்னரே தொகுப்பாளினி வேலை கிடைத்தது. அதுவம் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பணி.

தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார். தற்போது 6 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்து ஆண்டு வெளியாகவுள்ளது.

VJ Pooja turns out to be a special cop in web series

தற்போது குட்டி பத்மினி தயாரிப்பில் ஜீ5 வழங்கும் இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு குற்றவியல் சார்ந்த வெப் தொடர். தமிழ்நாட்டில் நடைபெற்ற 52 குற்றவியல் சம்பவங்களை அதன் பின்னணியோடும் குற்றம் புரிவதற்கு பின்னர் இருக்கும் நோக்கத்தையும், அந்த சம்பவங்களை விசாரணை செய்யும் ஒரு வெப் தொடராக இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் தொடரில் பூஜா ஒரு ஸ்பெஷல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரின் இந்த திரை அனுபவம் குறித்து நேர்காணலில் நமக்கு கூறுகையில் "நான் மிகவும் பாக்கியம் பெற்றவள். கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்னரே நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இன்று சினிமாவில் இத்தனை வளர்ச்சி அடைந்ததற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி கூற வேண்டும். எனக்கு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்த கனவு இன்று இந்த வெப் சீரிஸ் மூலம் நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னை அணுகி எனக்கு இந்த பெரிய வாய்ப்பை கொடுத்ததற்கு ஜீ5 க்கு தான் நன்றி கூறவேண்டும். இந்த இணைய தொடர் மற்றவை போல் அல்லாமல் 52 எபிசோடுகளாக ஒளிபரப்பபடவிருக்கும் நீண்ட தொடர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓடிடி தளத்தில் இந்த தொடரை கண்டு ரசிக்கலாம்.

இந்த தொடரில் நடித்தது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது. நம் நாட்டில் இப்படியும் இருக்கிறார்களா? இது போன்ற துணிச்சலான காரியங்கள் எப்படி செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. குற்றங்கள் மற்றும் அதன் சம்பவங்களை விவரிக்கும் போதே மெய்சிலிர்த்தது. நடந்த மிகவும் மோசமான சம்பவங்களை பற்றியும் அதன் விசாரணைக்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் குறித்தும் மிகவும் ஆழமாக வெளிக்காட்டியுள்ளனர் என்றார் பூஜா.

இந்த வெப் சீரிஸ் அடல்ட்ஸ் மட்டுமே பார்க்க வேண்டிய படம். இதில் நிறைய ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் சிறிது தயக்கம் ஏற்பட்டாலும் இது நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கும்.

பூஜாவிற்கு மேலும் பல சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து அவர் மேன்மேலும் வளர பிலிமிபீட் சார்பாக வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X