பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமா? கேபிஒய் தீனாவில் சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து!

சென்னை: பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் நடிகர் கேபிஒய் தீனா வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பிரியங்கா இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ, பாட்டு போட்டி, டான்ஸ் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினியாக இருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை வீட்டில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவருக்கு கடந்த ஏப்ரல் வாரம் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதால், தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி யாருக்குமே சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

VJ Priyanka Deshpande pregnant KPY Dheena
Photo Credit:

பிரியங்கா தேஷ்பாண்டே: பிரியங்காவின் கணவர் வசி, இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன் என்றும். இவர், இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். இலங்கையில் கலை நிகழ்ச்சிக்காக பிரியங்காவை அழைத்த போது தான் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியங்காவின் திருமண செய்தி இணையத்தில் வெளியானதும், புடிச்சாலும் புளியங்கொம்பா பிடித்துவிட்டார் என இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் வந்தன.

கர்ப்பமா: இந்நிலையில், பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அண்மையில் பிரியங்கா கேபிஒய் தீனாவின் குழந்தையை பார்ப்பதற்காக சென்று இருந்தார். அப்போது, தீனா நீங்களும் சீக்கிரம் ஆண்டியா வேண்டும், ஏற்கனவே நீங்க ஆண்டி தான் என்று சொல்லி இருந்தார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவி வருகிறது. ஆனால், இதுவெறும் வதந்தி தான், உண்மையில் பிரியங்கா கர்ப்பம் இல்லை. கர்ப்பமானால் மகிழ்ச்சி தான் என்று இணையத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X