விஜே பிரியங்கா எங்கே ஹனிமூன் போயிருக்காங்க தெரியுமா?.. கணவரோடு செம கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். வசி என்பவரை திருமணம் செய்திருக்கும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். வசியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரியங்கா தற்போது தனது கணவருடன் ஹனிமூனுக்கு சென்றிருக்கிறார்.
தமிழ் சின்னத்திரை உலகில் விஜய் டிவிக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த சேனலில் பணியாற்றியவர்கள், பணியாற்றுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸாகியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, நெல்சன் திலீப்குமார், ராஜ்குமார் பெரியசாமி, டிடி, கோபிநாத் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்தப் பட்டியலில் ஒருவர்தான் விஜே பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
கலகல பிரியங்கா: அந்த சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா. தான் ஆங்கரிங் செய்யும் நிகழ்ச்சிகளை எந்தவித சலிப்பும் தட்டாமல் கலகலவென்று கொண்டுபோவதில் கைதேர்ந்தவர் அவர். இதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ரசிகர்களும் ஆர்வத்தோடு பார்ப்பார்கள். சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் உள்ளிட்டவைகளை ஆங்கரிங் செய்த அவர்; சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

பிக்பாஸ் பிரியங்கா: பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கு கலந்துகொண்ட சீசனில் சிறப்பாக விளையாடினாலும்; பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். ஏற்கனவே பிரபலமாக இருந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கொண்டு பிரபல்யத்தை கொடுத்தது. இதனால் அவருக்கு மேற்கொண்டு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும்; குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
பிரியங்கா செய்துகொண்ட திருமணம்: இதற்கிடையே அவர் விஜய் டிவியில் தன்னுடன் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருமே உச்சபட்ச காதலோடு தங்களது வாழ்க்கையை வாழ்ந்துவந்த சூழலில்; சில காரணங்களால் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். அவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்களை பலர் யூகங்களாக சொல்லிக்கொண்டிருந்தனர். பிரியங்காவோ தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தார்.
இரண்டாவது திருமணம்: முதல் திருமண முறிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்த பிரியங்கா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். வசி என்பவரை அவர் காதலித்து மணம் முடித்திருக்கிறார். வசி டிஜேவாக பணியாற்றுவதாக தெரிகிறது. சென்னையில் திடீரென அவர்களது திருமணம் நடந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டார்கள். மேலும் வசிக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரியங்காவைவிட கிட்டத்தட்ட 20 வயது அவர் மூத்தவர் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
லண்டனுக்கு ஹனிமூன்: இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா தனது பிறந்தநாளை கொண்டாடினார். சூழல் இப்படி இருக்க அவர் தனது கணவர் வசியுடன் லண்டனுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார். லண்டன் வீதிகளில் ஊதா நிற பட்டு புடவையில் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியே சந்தோஷமாக வாழ வாழ்த்துகள் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் ட்ரெண்டாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











