நீங்க போட்ட காஃபி சூப்பர்... நிரஞ்சனி அகத்தியனை பங்கமாக கலாய்த்த ரக்ஷன்!

சென்னை : பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமானவர் நிரஞ்சனி.

பல திரைப்படங்களில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து அசத்தியிருப்பார்.

சமீபத்தில் இயக்குனர் தேசிங் பெரியசமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவரின் சமையலை விஜே ரக்ஷன் பங்கமாக கலாய்த்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சுவாரஸ்யம் குறையாமல்

சுவாரஸ்யம் குறையாமல்

இயக்குனராக என்ட்ரி கொடுத்த முதல் படத்திலேயே அனைவரது புருவங்களையும் உயர்த்த வைத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதை துளி கூட சுவாரஸ்யம் குறையாமல் காட்டியிருந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை நிரஞ்சனி அகத்தியன்.

இரண்டாவது கதாநாயகியாக

இரண்டாவது கதாநாயகியாக

காதல் கோட்டை உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான இவர் ஏற்கனவே பல படங்களுக்கு ஃபேஷன் டிசைனராக பணியாற்றி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான்,ரிது வர்மா ,ரக்ஷன், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தேனிலவுக்கு மாலத்தீவு

தேனிலவுக்கு மாலத்தீவு

நிரஞ்சனி மற்றும் தேசிங் பெரியசமி இருவருக்கும் படப்பிடிப்பில் ஏற்பட்ட நட்பு பின் காதலாகி இருவீட்டாரின் சம்மதத்துடன் சமீபத்தில் அனைவரது முன்னிலையிலும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இப்பொழுது இந்த ஜோடி தேனிலவுக்கு மாலத்தீவு வரை சென்று எஞ்சாய் செய்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே வைரல் ஆகி இருந்தது.

கலகலப்பான வீடியோ

கலகலப்பான வீடியோ

நிரஞ்சனி மற்றும் விஜே ரக்ஷன் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறிந்ததே. இந்த நிலையில் நிரஞ்சனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரக்ஷன் மற்றும் நண்பர்கள் நிரஞ்சனி வீட்டுக்கு சென்ற இடத்தில் டீ அருந்த, குடித்துப் பார்த்த ரக்ஷன், காஃபி சூப்பர் என பங்கமாக கலாய்க்க .. அது காஃபி இல்ல டீ என்று ரக்ஷனுடன் நிரஞ்சனி மல்லுக்கட்டும் கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X