சரக்கு அடிச்சியான்னு என்ன கேட்டாரு.. விவாகரத்துக்கு காரணம் இதுதான்.. விஜே ரம்யா பேட்டி!
சென்னை: சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே ரம்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். இவர், தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து அளித்துள்ள பழைய பேட்டி திடீரென வைரலாகி வருகிறது.
இவர் தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் திரைப்படத்தில் சின்ன சின்னவேடங்களில் நடித்துள்ளார். மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன், ஆடை, மாஸ்டர், கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், 2014-ம் ஆண்டு அபரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரே ஆண்டில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் ரம்யா, சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வொர்க்அவுட் தொடர்பான படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

வி.ஜே.ரம்யா: இந்நிலையில், விஜே ரம்யா அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய ரம்யா, திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது, புனிதமானது என்பதில் மாற்று கருத்து இல்லை. நான், நடிகையாக மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், என் திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு என் மீது அனுதாபம் தான் வந்து இருக்கும். ஆனால், நான் நடிகை என்பதால், என் மீதான பார்வை மாறுகிறது. என் பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எப்படிப்பட்டவள் என்பது என் அப்பா, அம்மா, நண்பர்களுக்கு தெரிந்தால் மட்டும் போது, மற்றவர்களுக்கு அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எல்லாத்துக்கும் காரணம் இருக்கு: மேலும், ஒரு பெண் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அனைத்துமே அவளுடைய விருப்பம் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. ஆசை ஆசையாக ஒரு திருமணத்தை செய்து கொண்டு, அந்த திருமண வாழ்க்கையில் இருந்து வெளிவர யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி வந்தார்கள் என்றால், அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும். ஆனால், மற்றவர்களின் பார்வைக்கு அது வேறாகத் தெரியும்.
நைட்டு புல்லா சரக்கா: அது போலத்தான் நான் 18 வயதில் படிப்பு, நடிப்பு என்று பிஸியாக இருந்தேன், இரவில் சரியாக தூங்காததால், என் கண் சிவப்பாக இருந்தது. அப்போது ஒரு கேமரா மேன், என்னிடம் வந்து நைட் புல்லா சரக்கானு கேட்டாரு, அதைத் கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. உடனே தனியாக சென்று அழுதேன். இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுகிறேன் என விஜே ரம்யா இந்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications