‘ஆடை’யில்லாத தன் பாய்பிரண்டின் புகைப்படத்தை வெளியிட்ட விஜே ரம்யா.. ஷாக்கான ரசிகர்கள்!

எலும்புக் கூடு ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஜே ரம்யா.

சென்னை: நடிகை விஜே ரம்யாவின் பிறந்தநாள் அன்று, ஒருவர் சூப்பரான பரிசு ஒன்றை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியான விஜே ரம்யா இன்று பிஸியான நடிகை. டாப்சியின் கேம் ஓவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அமலா பாலின் ஆடை படத்தில், அவரது தோழியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரம்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார். அவரது சமூக வலைதளப்பக்கங்களை பார்த்தால், அதனை நன்றாக உணரமுடியும்.

வாழ்த்து:

இந்நிலையில் ரம்யா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். நண்பர்கள் உறவினர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பரிசு வழங்கினர். அதில் ஒருவர் கொடுத்த பரிசு தனக்கு மிகவும் ஸ்பெஷல் என ரம்யா ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எலும்புக்கூடு பரிசு:

எலும்புக்கூடு பரிசு:

ஒரு எலும்புக்கூடு பொம்மை தான் அந்த ஸ்பெஷல் பரிசு. அவருடைய ஜிம் பயிற்சியாளர் தான் அந்த பரிசை கொடுத்திருக்கிறார். இது குறித்த பதிவில் அவர், "இந்த பேபி எனது பிறந்தநாள் அன்று ஸ்டைலாக என்னிடம் வந்தது. இதை எனக்கு பரிசளித்த எனது பயிற்சியாளருக்கு நன்றி. இது தான் எனக்கு பொருத்தமான பாய் பிரெண்ட்", என குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி:

நெட்டிசன்கள் கேள்வி:

ஆடை படத்தில் நடித்ததை குறியீடாக காட்டுவதற்காக, ஆடையில்லாத எலும்புக்கூடு பொம்மையை பரிசளித்திருக்கிறார்களா? என நெட்டிசன்கள் ரம்யாவை கலாய்த்து வருகிறார்கள். மேலும் இது தான் தனக்கு பொறுத்தமான பாய் பிரெண்ட் ரம்யா கூறியிருப்பதற்கு, நெட்டிசன்கள் வில்லங்க சிரிப்பு சிரிக்கிறார்கள்.

புரியாத புதிர்:

புரியாத புதிர்:

‘உங்க பாய் பிரண்டுக்கு பேரு வைக்கிறதுக்கு முன்னாடி சோறு வைங்க.. எலும்பும் தோலுமா இருக்காரு' என இந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் ரம்யாவை கிண்டல் செய்து வருகின்றனர். ஏன் இப்படி ஒரு எலும்புக் கூடு பொம்மையை ரம்யாவுக்கு அந்த ஜிம் மாஸ்டர் பரிசளித்தார் எனத் தெரியவில்லை. ரம்யாவும் அதனை தனது பாய் பிரண்ட் என ஏன் குறிப்பிட்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X