கை கழுவுங்க.. இதையும் கடந்து வருவோம்.. விஜே ரம்யா போட்ட வீடியோ !

சென்னை : நடிகை மற்றும் தொகுப்பாளர் விஜே ரம்யா கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது.

vj ramya shared corona awareness video

தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என பல பணிகள் முடங்கி உள்ளன. மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு தொற்று நோய் தான் என்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வி.ஜே. ரம்யா, கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதில் நாம் அடிப்படையில் கை கழுவுவதை அவசியமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். நாம் தினந்தோறும் செய்யும் ஒரு விஷயமாக வெளியே சென்று வந்தவுடன் கைகழுவுவதை அவசியமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

vj ramya shared corona awareness video

மேலும் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் அனைத்து சுத்தம் செய்யும் மருந்துகளை பையில் எடுத்து செல்ல வேண்டும் அது மிகமிக அவசியம் என்று கூறியுள்ளார். முக்கியமாக டிஸ்ஸு பேப்பர்கள், கிருமிநாசினி மருந்து ஆகியவற்றை அடங்கிய பைகளை அதிகம் வெளியே செல்பவர்கள் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் .

மேலும் நாம் இந்த நேரத்தில் தான் மிகவும் தைரியமாக நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும் அப்படியாக மனதை பக்குவபடுத்தி கொள்ளுங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார். மேலும் பல விஷயங்களை நாம் கடந்து வந்துள்ளோம். அதே போல இதையும் நாம் கட்டாயம் கடந்து வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

vj ramya shared corona awareness video

வெளியில் செல்வதை தடுங்கள் விடுமுறை கிடைத்து உள்ளது என்று வெளியே செல்லாதீர்கள் என கூறியுள்ளார். மேலும் நெட்பிலிக்ஸ் இருக்கிறது அதனுடன் சில் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார். ஏனெனில் அனைத்து இடங்களும் காலியாகி வருகிறது இந்த சூழ்நிலை நம் மனநிலையை மாற்றும் அதனால் இந்த நேரத்தில் நம் மனதை சரியாக வைத்து கொள்வது அவசியம் என்று கூறியிருக்கிறார்.

vj ramya shared corona awareness video

விஜே ரம்யா மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சங்கத்தலைவன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X