பிகில் ஆடியோ ரிலீஸ்.. தொகுப்பாளினி அமலாபால் தோழி.. கடைசி நேரத்துல ‘அங்க’ மட்டும் போய்டாதீங்க மேடம்!

Recommended Video

Bigil Audio launch on september 19

சென்னை: விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க போகிறார் பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி விஜே ரம்யா சுப்ரமணியன்.

சர்கார் படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் பிகில். இந்த படத்தில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குனர் அட்லீ. ஏற்கனவே தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பதால் பிகில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு பண்டிகையையொட்டி ரிலீசாகிறது. நயன்தாரா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

பிகில் இசை வெளியீட்டு விழா

பிகில் இசை வெளியீட்டு விழா

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் விஜய் கலந்துகொள்கிறார். அவர் என்ன பேசப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜே ரம்யா

விஜே ரம்யா

இந்நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி மற்றும் மெர்சல் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கியவர் ரம்யா தான். தற்போதும் அவரையே தொகுப்பாளராக தேர்வு செய்துள்ளனர்.

பிகில் அடிக்க ரெடியா

இந்த தகவலை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிகில் இசை வெளியீட்டு விழாவை தொகுப்பு வழங்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. சும்மா தெறியா மெர்சல் பண்ணிட்டோம். இப்போ அடுத்து பிகில் அடிக்க ரெடியா" என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆடை மாதிரி நடக்காதே

ஆடை மாதிரி நடக்காதே

விஜே ரம்யா தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். டாப்சி நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு அமலா பாலின் ஆடை படத்தில் அவரது தோழியாக நடித்து பெயர் வாங்கினார். அந்த படத்தில் ஒரு காட்சியில் பாத்ரூம் போகும் ரம்யாவை உள்ளே வைத்து கதவை சாத்திவிடுவார் அமலா. இதனால் ரம்யாவால் செய்தி வாசிக்க முடியாமல் போய்விடும். பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது அது போல் எங்காவது போய் மாட்டிக்கொள்ளாதீர்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X