VJ Ramya: AI பயன்படுத்தி ரம்யா சுப்ரமணியன் வீடியோ.. அத்துமீறிய இணையவாசிகள்.. மிரட்டி விட்ட ரம்யா
சென்னை: இணையம் வளர வளர எந்த அளவுக்கு பயன்களும் வசதிகளும் பெருகுகிறதோ, அதே அளவுக்கு தொல்லைகளும் ஆபத்துகளும் பெருகிக் கொண்டே போகிறது. அதுவும் AI போன்ற ஒரு தொழில்நுட்பம் அறிமுகமான பின்னர், அதை மிகவும் தவறாக பயன்படுத்துபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் பிரபல வி.ஜே. ரம்யா சுப்ரமணியனுக்கு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி விஜே. ரம்யா சுப்ரமணியன். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும், விஜய் டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ரம்யா சுப்ரமணியன் அவ்வப்போது தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு வெள்ளித்திரையிலும் தலை காட்டி வந்தார். தற்போது முழுக்க முழுக்க வெள்ளித்திரை தான் என்ற முடிவில், சினிமாக்களில் மட்டும் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், சில படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பிரமாண்டமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
ரம்யா சுப்ரமணியனைப் பொறுத்தவரையில் மிகவும் சுவாரஸ்யமான பிரபலம். ஒருபுறம் நடிப்பு, தொகுப்பாளனி என ஒரு ரவுண்ட் வந்தாலும், மற்றொரு புறம் உடல் ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் இருப்பதால், தனது உடலை ஃபிட்னஸாக வைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்கும் சொல்லி வருகிறார். இது தொடர்பாக ரம்யா சுப்ரமணியன் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். பலருக்கு பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரம்யா சுப்ரம்ணியன்: அதாவது, " தனது வீடியோவைப் பயன்படுத்தி. அதில் வேறு ஒருவர் பேசுவது போல AI தொழில்நுட்பத்தின் மூலம் குரலை மாற்றி பதிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, தனது வீடியோவை தவறாக பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது மூன்றாவது முறையாக நடக்கிறது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாய்ஸ் ஓவர் செய்து தவறாக பயன்படுத்தியுள்ளார்கள்.
எச்சரிக்கை: இது சட்டத்திற்கு எதிரானது, நியாயமற்றது மற்றும் இது எனது காப்புரிமைகளுக்கு எதிரானது. இந்த வீடியோவை டெலிட் செய்யவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். உன்னை எச்சரிக்கிறேன்" என பதிவிட்டு சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்துள்ளார். இவரது இந்த பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரியா வாரியர்: அண்மையில் கூட நடிகை பிரியா வாரியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரை, நடிகர் விஜய் பாராட்டுவது போல ஒரு வீடியோ திரையில் போடப்பட்டது. இதைப் பார்த்த பிரியா வாரியர், தளபதி விஜய் தன்னைப் பாராட்டி விட்டார் என நினைத்து உணர்ச்சிவசப்பட்டார். ஆனால் அதற்குள் தொகுப்பாளர், இது AI வீடியோ எனக் கூறியதும் பிரியா வாரியர் மொத்தமாக அதிர்ச்சி அடைந்தார் மற்றும் ஏமாற்றம் அடைந்தார். AI தொழில்நுட்பம் அறிமுகமான பின்னர் அதனைப் பயன்படுத்தி தேவையில்லாத விஷயங்களை செய்யும் இணையவாசிகள் இருக்கதான் செய்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











