Ramya Subramanian: லியோ பாடலை கிளாசிக்கலாக மாற்றிய ரம்யா.. அடுத்தது தான் ட்விஸ்ட்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

சில பேட்ச் வேலைகளை முடிக்கும் வகையில் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே படத்தின் டப்பிங் வேலைகளை விஜய் உள்ளிட்ட சிலர் முடித்துள்ளனர்.

VJ Ramya subramanians Reels on Vijays Leo movie song Naa ready makes fans more fun

வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

நா ரெடி பாடலை கிளாசிக்கல் மற்றும் குத்து டான்சாக மாற்றிய ரம்யா சுப்ரமணியன்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சில பேட்ச் வேலைகளுக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

VJ Ramya subramanians Reels on Vijays Leo movie song Naa ready makes fans more fun

விஜய் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் சிலர் தங்களது டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீடு சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரையில் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டர்கள் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகின. இவை அனைத்துமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் நா ரெடி என்ற படத்தின் முதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வியூஸ்களை பெற்று வருகிறது.

VJ Ramya subramanians Reels on Vijays Leo movie song Naa ready makes fans more fun

இதனிடையே, ஏராளமான ரசிகர்கள், பிரபலங்கள், வெளிநாட்டினர் என வழக்கம்போல விஜய்யின் இந்தப் பாடலை ரீல்சாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல விஜே ரம்யா சுப்ரமணியன் தனது தோழிகளுடன் இந்தப் பாடலின் ரீல்சை வெளியிட்டுள்ளார். முதலில் கிளாசிக்கல் நடனமாக துவங்கும் அவர்கள் தொடர்ந்து குத்து டான்சாக தங்களது நடனத்தை மாற்றுகின்றனர். அவரது இந்த நடனம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

விஜே ரம்யா சுப்ரமணியன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுபவர். இவரது பல ரீல்ஸ்கள் மற்றும் போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. மேலும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது அடுத்தடுத்த சிறப்பான படங்கள், வீடியோக்களால் கவரப்பட்டு, 12 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X