VJ Ramya: உடற்பயிற்சியின் போது விபத்து.. வி.ஜே ரம்யா முகத்தில் காயம்.. பதறிய பேன்ஸ்!

சென்னை: வி.ஜே ரம்யா உடற்பயிற்சியின் போது முகத்தில் காயம் ஏற்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் ரம்யா, டிடி மட்டும்தான் மாறி மாறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.

VJ Ramya suffered a facial injury during exercise

விஜே ரம்யா ஜெகனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமாகி விட்டார்.

விஜே ரம்யா: விஜய் தொலைக்காட்சியின் இரண்டு கண்கள் போல ரம்யாவும், டிடியும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டனர். ரம்யா மற்றும் டிடி இருவரும் அடுத்தடுத்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த ரம்யா, விவாகரத்து பெற்றும் மீண்டும் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்தனர். அதே போல டிடியும் தனது கணவரை பிரிந்துவிட்டார்.

வெள்ளித்திரையில்: டிடி இப்போதும் விஜய் டிவியில் ஏதாவது விஐபியை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் மறுக்காமல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், ரம்யா விஜய் டிவியை விட்டு வெகு தூரம் விலகி சினிமா பக்கம் வந்து விட்டார். இவர் டாப்சியுடன் கேம் ஓவர், அமலா பாலுடன் ஆடை என பல்வேறு படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில்: விஜே.ரம்யா சங்க தலைவன் படத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்து பெயர் எடுத்தார். தற்போது இவர், சினிமா துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, ஆடியோ லான்ச் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

முகத்தில் காயம்: உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, இவர் தசைகளை குறைக்கும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, இடுப்பில் பொருத்தப்பட்டிருந்த கிலோ டெம்பில் தவறுதலாக உருண்டு என்னுடைய முகத்தில் விழுந்துவிட்டது. ஆனால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக எனக்கு உதவி செய்தார்கள். எனக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை லேசான காயம் தான் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X