நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மீண்டும் வருவேன்… விஜய் டிவி ரம்யா
சென்னை: திருமணம் செய்து கொண்டு புதுமணப்பெண்ணாக வலம் வரும் விஜய் டிவி ரம்யா, திருமணத்திற்குப் பின்னரும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியை செய்வேன் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. கடந்த 10 ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் சினிமாவின் பிரமாண்டமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஒதுக்கிய ரம்யா, காதல் திருமணம் செய்ய மாட்டேன் பெற்றோர்கள் பார்ப்பவரையே மணப்பேன் என்றும் அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போல பெற்றவர்களும் ரம்யாவுக்கு அஜீத் ஜெயராமன் என்பரை திருமணம் செய்ய நிச்சயித்தனர்.
பிப்ரவரி 21ம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் ரம்யா-அஜீத் திருமணம் சிறப்பாக நடந்தது. இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜெய், சிவகுமார், சமுத்திரக்கனி, எஸ்.வி.சேகர் உள்பட திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

லண்டன் மாப்பிள்ளை
ரம்யாவின் கணவர் அஜீத் லண்டனில் படித்து அங்கேயே வேலை பார்க்கும் சென்னை மாப்பிள்ளை. நான் சென்னையை விட்டு வரமாட்டேன். நீங்கள் வேலையை சென்னைக்கு மாற்றி வந்து விடுங்கள் என்ற கோரிக்கையை அஜீத் ஏற்றுக் கொள்ள திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

காதலர்களுக்கு பிடித்த பிப்ரவரி
காதலர்களுக்கு பிடித்த மாதமான பிப்ரவரியில் மணமகளானார் விஜய் டிவி ரம்யா. புதுமணப்பெண்ணுக்கு உரிய களை முகத்தில் அப்படியே தெரிகிறது.

மெகந்தியில் ஜொலிப்பு
திருமணத்திற்கு முன்னர் மெகந்தி போட்டு உற்சாக போஸ் கொடுத்த ரம்யா.

மணிரத்னம் – சுஹாசினி
சினிமாவில் நடிக்காவிட்டாலும் பிரபல நட்சத்திரங்கள் இயக்குநர்கள் ரம்யாவின் திருமணவிழாவில் பங்கேற்றனர். சுஹாசினி தனது கணவர் மணிரத்னத்துடன் வந்து வாழ்த்தினார்.

சிவகுமார் வாழ்த்து
நடிகர் சிவகுமார் தனது மனைவியுடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.

பட்டு வேஷ்டியில் பிரபலங்கள்
ரம்யாவின் திருமணத்தில் பிரேம்ஜி, வெங்கட்பிரபு, ஜெய், உள்ளிட்ட நண்பர்கள் பட்டு வேஷ்டி சட்டையில் பங்கேற்றனர்.

சமுத்திரகனி, எஸ்.வி.சேகர்
ரம்யாவின் திருமணவிழாவில் திரைப்படத்துறையினர் மட்டுமல்லாது அரசியல்வாதிகளும் பங்கேற்றனர். இயக்குநர் சமுத்திரகனி, நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலுவும் பங்கேற்று வாழ்த்தினார்.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை
இந்த திருமணம் பற்றி கருத்து கூறியுள்ள ரம்யா, குடும்பத்தில் முதன்முதலா நான் தான் மீடியாவாசியாக வாழ்க்கையை ஆரம்பித்தவள். வீட்டில் ஆரம்பத்தில் சொன்ன ஒரே விஷயம், "நாங்க பார்த்து வைக்கிற மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!" என்பது மட்டும்தான்.

எல்லோருக்கும் சந்தோசம்
‘ரம்யாவுக்கு இருக்குற நட்பு வட்டத்தை பார்த்தால், கண்டிப்பா இவ காதல் திருமணம்தான் செய்துப்பா!' என்று உறவுக்காரங்க, நண்பர்கள் பலரும் சொல்வாங்க. அவங்க வார்த்தையை பொய்யாக்கணும், யாரிடமும் விழுந்திடக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். இப்போ, பெற்றோர், உறவினர் என்று எல்லோருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியாச்சே.

மீண்டும் தொடருவேன்
என் கணவருக்கு என்னுடைய நிகழ்ச்சி தொகுப்பு மிகவும் பிடிக்கும். திருமணத்திற்குப் பின்னர் சென்னையிலேயே தங்கி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியை தொடருவேன் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார் விஜய் டிவி ரம்யா.


Click it and Unblock the Notifications











