Don't Miss!
- News
துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பவர் லிஃப்டிங் போட்டியில் இரட்டைத் தங்கம் வென்ற நடிகை விஜே ரம்யா!
சென்னை: பவர் லிஃப்டிங் போட்டியில் இரட்டைத் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார் தமிழ் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன்.
பல முகங்கள் கொண்ட ரம்யாவ, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்.

சமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 'Dead Lifting' போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
இது குறித்து ரம்யா பேசுகையில், ''கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்தன. என்னால் இந்த 'Power Lifting' போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன்.

நான் வாழ்வில் எது செய்ய நினைத்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,'' என்றார்.