VJ Ramya - என்னது சென்னை உங்களை கைவிட்ருச்சா?.. திருப்பி இங்கதான் வரணும்.. விஜே ரம்யாவுக்கு ரசிகர்கள் பதிலடி
சென்னை: VJ Ramya (விஜே ரம்யா) தொகுப்பாளினி ரம்யா தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு பெரும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.
சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு என்று எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். பெப்சி உமா, டிடி, சிவகார்த்திகேயன் என அந்தப் பட்டியல் நீளும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரம்யா. தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருபவர் ரம்யா.

படங்களில்: தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட அவர் மாடலிங்குக்குள் நுழைந்து பின்னர் தொகுப்பாளினியாக மாறினார். கலகலவென்று நிகழ்ச்சியை தொகுத்து செல்லும் அவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். ராதாமோகன் இயக்கிய மொழி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா, வனமகன், மாஸ்டர், சங்கத்தலைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இன்னும் சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.
டைவர்ஸ்: சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதற்கான காரணம் குறித்து எதுவும் அவர் சொல்லவில்லை. முதல் திருமண முறிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்து வரும் ரம்யா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.
சர்ச்சை பதிவு: இந்த சூழலில் அவர் விமானத்திலிருந்து எடுத்த புகைப்படத்தோடு இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஸ்டோரி ரசிகர்களிடம் கண்டனத்தை பெற்றிருக்கிறது. அவர் தனது பதிவில், "என்னுடைய முதல் தாய் வீடு என்னை கைவிட்டுவிட்டது. என்னுடைய இரண்டாவது தாய்வீடான தெலங்கானா என்னை காப்பாற்றியிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி மறந்த ரம்யா: இதனை பார்த்த ரசிகர்கள் பலரையும் வாழ வைத்த, வாழ வைத்துக்கொண்டிருக்கும் சென்னை மிக்ஜாம் புயலால் நிலைகுலைந்து போயிருக்கிறது. எப்படி மீள்வது என்று தெரியாமல் மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சென்னை தன்னை கைவிட்டதாக ரம்யா பதிவு போட்டிருப்பது அவரது நன்றி மறவாமையை காண்பிக்கிறது.
இப்போது வேண்டுமானால் அவரை தெலங்கானா காப்பாற்றலாம். ஆனால் சென்னைதான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. மீண்டும் சென்னைக்குத்தானே நீங்கள் திரும்பி வரணும் என காட்டமாக கேள்வி எழுப்பிவருகின்றனர். முன்னதாக மிக்ஜாம் புயலால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இப்போது வடிய ஆரம்பித்திருக்கிறது. நேற்று இரவிலிருந்து மழை குறைந்துவிட்டதால் சென்னையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர பலரும் ஒருங்கிணைந்து உழைத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











