அச்சச்சோ.. ரியோ என்ன இப்படி சொல்லிட்டாரு.. பிக்பாஸ் ஆரம்பிக்கிறதுக்குள்ள என்னலாம் பண்ண போறாங்களோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறப்படும் ரியோ ராஜின் டிவிட் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக நட்சத்திர ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

முரணாக பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் என்பதில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது. உறுதி செய்யப்பட்ட பிரபலங்கள் என வைரலான பட்டியலில் இருந்த பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முன்னுக்கு பின் முரணாக சமூக வலைதளங்களில் பதில் கூறி வருகின்றனர்.

கிரண் பதில்
ஆனால் அவையெல்லாம் ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் ட்ரிக் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை கிரண், வெல்கம் டூ பிக்பாஸ் என்று ரசிகர் கூறியதற்கு என் வீட்டிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் பதில் அளித்தார். ஆனால் அதனை உடனடியாக நீக்கினார்.

கேள்வி பட்டேன்
அவரை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டியும், பிக்பாஸில் பங்கேற்போவதாக கேள்வி பட்டோம் என்ற கேள்விக்கு நானும் கேள்வி பட்டேன் என சம்பந்தமே இல்லாததுபோல் பதில் கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்கள் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லையா என்று கேட்டு நொந்து போயினர்.

காயத்ரி மறுப்பு
மற்ற சேனல்களை சேர்ந்த விஜே அர்ச்சனா மற்றும் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் போன்றோர் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகையான காயத்ரியும் தான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை, பாப்கார்ன் கொரித்துக் கொண்டே பார்க்க போகிறேன் என்றார்.

ஏமாற்றக்கூடும்
இந்நிலையில் பிரபல விஜேவும் நடிகருமான ரியோ ராஜின் டிவிட்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது எனது முடிவுகள் உங்களை ஏமாற்றக்கூடும், ஆனால் எனது செயல்கள் ஏமாற்றாது.. என்னுடைய நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்.. லவ் யூ ஆல்.. என குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டு போட மாட்டோம்
அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் பிக்பாஸுக்கு போகவில்லையா? உண்மையை சொல்லுங்கள் இல்லாவிட்டால் ஓட்டு போடமாட்டோம் என செல்லமாக மிரட்டியுள்ளனர். இன்னும் சிலர் வெல்கம் டூ பிக்பாஸ் என்றும் தெறிக்க விடுவோம் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











