இயக்குநர் அவதாரம் எடுத்த விஜே சித்து.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
சென்னை: யூடியூபில் விதவிதமான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வயிறு சிரிக்க வைத்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார் விஜே சித்து. இவர் நடிகர், பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜே சித்து இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.
பிளாக் ஷிப் யூடியூப் சேனலில் பிராங் ஷோ மூலம் பிரபலமானவர் தான் விஜே சித்து. அந்த சேனலில் இருந்து விலகிய இவர், தனியாக, விஜே சித்து விலாக்ஸ் என்கிற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, டூர் செல்வது, பிரபலங்களை வைத்து மொட்டை பார்ட்டி என இன்றைய இளசுகளுக்கு பிடித்தமான வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நண்பர்கள் சேர்ந்து அரட்டை அடித்தால் எப்படி கலகலப்பாக இருக்குமோ அப்படி இவர்களின் வீடியோ இருப்பதால், இவர்களின் சேனலுக்கு 40 லட்சத்துக்கு அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். சேனல் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இவர்களின் வளர்ச்சி உண்மையில் வியக்கக்கூடிய வகையில் இருந்தது.

விஜே சித்து விலாக்ஸ்: யூடியூப் சேனலில் கலக்கி வந்த இவர், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி நண்பனாக நடித்திருந்தார். 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 150 ரூபாயை வசூலித்தது. இந்த படத்தில் விஜே சித்துவின் நண்பனான அஷ்ரத் கானும் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜே சித்து இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜே சித்து நடித்து இயக்கும் படத்திற்கு 'டயங்கரம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் அவதாரமெடுக்கும் சித்துவுக்கு வாழ்த்துகள், "டயங்கரம் படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி. தான் இயக்கும் முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமாகும் விஜே சித்துவுக்கு வாழ்த்துகள். சினிமா உலகிற்கு வரும் உங்களுக்கும், படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷுக்கும் வாழ்த்துகள்" என அதில் தெரிவித்துள்ளார்.

டயங்கரம்: தனுஷ் வெளியிட்டுள்ள 'டயங்கரம்' படத்தின் டைட்டில் வீடியோவில் சித்து, ஐசரி கணேஷின் அலுவலகத்தில் கதை சொல்ல தந்தையோடு செல்கிறார். இதைப்பார்த்த ஐசரி, கணேஷ் காலேஜுக்கு சீட்டு வாங்கத்தான், அப்பாவோட வருவாங்க, நீ என்ன படம் எடுக்க கதை சொல்ல அப்பாவோட வந்து இருக்க என்று கேட்பதும், பின் அஷ்ரத் கான் மற்றும் அவர்கள் நண்பர்களின் வழக்கமான அரட்டையும் டைட்டில் ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது. வழக்கமாக சித்து மற்றும் அஷ்ரத் கான் இருவரும், பேசும் போது அடிக்கடி 'டயங்கரம்' என்பார்கள். அதையே தற்போது விஜே சித்து தனது படத்திற்கு தலைப்பாக வைத்து இருக்கிறார். இவருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://youtu.be/7XF1mZHJtQs


Click it and Unblock the Notifications











