கடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி

By Siva

சென்னை: கடம் உமாசங்கர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்ரீரஞ்சனி.

மீ டூ இயக்கம் சூடுபிடித்துள்ள நிலையில் பல பிரபலங்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள். புகார் தெரிவிப்பவர்களிடம் ஆதாரம் கேட்கிறார்கள், ஏன் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தீர்கள் என்று கேட்கிறார்கள்.

நடந்த கொடுமையை வெளியே சொன்னால் பெண் மீது குறை சொல்லும் சமூகத்தில் அவர்கள் எப்படி தைரியமாக வெளியே சொல்வார்கள்.

 ஸ்ரீ ரஞ்சனி

ஸ்ரீ ரஞ்சனி

கடம் உமா சங்கருடன் மீ டூ சம்பவம் நடந்தது. ஆதாரம் கேட்பவர்களே, இது என் அலுவலகத்தில் சக ஊழியர்கள் கண் முன்பு பட்டப்பகலில் நடந்தது என்று டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், பாடகியுமான ஸ்ரீ ரஞ்சனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.

ஆர்.ஜே.

கடந்த 2010ம் ஆண்டு தான் நான் முதன்முதலாக உமாசங்கரிடம் பேசினேன். அப்போது நான் ஆர்.ஜே.வாக இருந்தேன். அவர் என் ரேடியோ ஸ்டேஷனுக்கு விருந்தினராக வந்தார். என் செல்போன் எண்ணை வாங்கி எனக்கு ஸ்வீட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மெசேஜ் அனுப்பினார். அதை நான் கண்டுகொள்ளவில்லை.

7 ஆண்டுகள்

7 ஆண்டுகள் கழித்து நான் டிஜிட்டல் மீடியா நிறுவனத்தில் வேலை செய்தபோது யூடியூப் சார்ந்த ப்ராஜெக்ட் தொடர்பாக அவர் அங்கு வந்தார். என்னை கடந்து சென்றபோது என் இடுப்பில் கிள்ளினார். இது ஒரு பே பகுதியில் 15 பேர் முன்பு நடந்தது. இது தான் உண்மையான தொல்லை. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஆண்களும் என்னை போன்றே அதிர்ச்சி அடைந்தார்கள். அதில் இருந்து அவர் தொடர்பான ப்ராஜெக்டுகளில் நான் வேலை செய்வதை தவிர்த்தேன். அதற்கு என் நிறுவனமும் சம்மதித்தது. ஆனால் அவர் கடவுள் பற்றியும், தான் ஒரு பக்திமான் என்றும் பேசுவது என்னை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரஞ்சனி.

விஜய் டிவி

ஸ்ரீ ரஞ்சனி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் அமித் பார்கவின் மனைவி தான் ஸ்ரீ ரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் போட்ட ட்வீட்டை பார்த்த ஒருவர் இந்த பால் வடியும் மூஞ்சியில் இவ்வளவு காமக்கொடூரமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போன் செக்ஸ்

நடிகர் ஜான் விஜய் தனக்கு போன் செய்து செல்போன் மூலம் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீரஞ்சனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X