இது புதுசாவுல இருக்கு.. இந்த நடிகரும் பிக்பாஸுக்கு போகப்போறாரா? போட்டு வாங்கிய ரசிகர்கள்!
சென்னை: இளம் விஜே ஒருவர் ரசிகருக்கு அளித்துள்ள பதிலை பார்த்த நெட்டிசன்கள் அப்போ நீங்க பிக்பாஸ்க்கு போறது கன்ஃபார்மா என்று கேட்டுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ரணகளமாக சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இரண்டு புரமோக்களும் அதிக லைக்ஸ்களை குவித்தது.

பிக்பாஸ் மேடை
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பகீரப்பட்டு வருகிறது. ஆனால் போட்டியாளர்கள் பிக்பாஸ் மேடைக்கு வரும் வரை அதிகாரப்பூர்வமாக அது குறித்த தகவல் தெரியாது.

விஜே ரக்ஷன்
வரவிருக்கும் பிக்பாஸ் சீசனின் போட்டியாளர் பட்டியலில் மேலும் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டு வருகிறது. பிரபலமான வி.ஜேவும் நடிகருமான ரக்ஷன் பெயர்தான் அது. தனது இன்ஸ்டாகிராமில் தனது இரண்டு போட்டோக்களை ஷேர் செய்ததை தொடர்ந்து இந்த பேச்சு எழுந்துள்ளது.

ஏன் வர மாட்றீங்க?
அதாவது விஜேவும் நடிகருமான ரக்ஷன் தனது போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். அதனை பார்த்த ரசிகர்கள், ஏன் புரோ இப்போல்லாம் உங்களை விஜய் டிவியில் பார்க்க முடியவில்லை என கேட்டனர்.

ஸ்பெஷலா வரேன்
அதற்கு உடனடியாக பதில் அளித்த ரக்ஷன், விரைவில், ஒரு ஸ்பெஷலுடன் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிர்கள் அப்போ நீங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்களா என கேட்டு வருகின்றனர். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷன் பங்கேற்க போவதாகவும் தகவல் பரப்பி வருகின்றனர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை, நிகழ்ச்சி தொடங்கும் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜேவான ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் காளிஸ்வரமூத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.


Click it and Unblock the Notifications











