உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.. நாஞ்சில் விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வைஷூ உருக்கம்!
சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக திருநங்கை விஜே வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்து சில நாட்களிலேயே அதை வாபஸ் பெற்றார். தற்போது விஜே வைஷு நாஞ்சில் விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் நடித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடுவார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.

நாஞ்சில் விஜயன்: இந்நிலையில், திருநங்கை விஜே வைஷு , நாஞ்சில் விஜயனும் நானும் 2011ஆம் ஆண்டில் இருந்து நண்பர்களாக பழகி வந்தோம். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு என்னுடைய குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, பொருளாதார ரீதியாக நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் நாஞ்சில் விஜயன் இருந்தார். அவரை நான் காதலித்தேன், அவரும் என் காதலை ஏற்றுகொண்டார். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நானும் அவரும் காதலர்களாக தான் பழகி வந்தோம். திருமணம் செய்து கொள்வதற்கு கூட என்னிடம் அனுமதி கேட்டார். என்னால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் தான் அவருக்கு அனுமதி கொடுத்தேன்
திருநங்கை வைஷூ: திருமணத்திற்கு பிறகும் என்னுடன் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. இனிமேல், நாம் பழகினால் அது சரியாக வராது என்று என்னை ஒதுக்கி விட்டார். என்னுடைய நம்பர் அனைத்தையும் பிளாக்கின் போட்டு விட்டார். இதனால் தான், நான் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன். இத்தனை ஆண்டுகளாக கணவன் மனைவியாக நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தோம். இந்த விஷயம் நாஞ்சில் விஜயன் அவர்களின் குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும் என அதிரடியான பல குற்றச்சட்டுகளை வைத்து இருந்தார்.
பகிரங்க மன்னிப்பு: இதை நாஞ்சில் விஜயன் மறுத்து வைஷு எனக்கு நல்ல தோழி, முன்பு அவர் போன் செய்யும் போதேல்லாம் பேசுவேன். ஆனால், இப்போது குழந்தை பிறந்துவிட்டது, நான் குழந்தையுடன் இருக்க விரும்புகிறேன். வைஷு குடித்துவிட்டு இரவு பேசுவதால் பேசுவதை தவிர்த்துவிட்டேன் என்று பேசி இருந்தார். இதையடுத்து, வைஷு, நாஞ்சில் விஜயன் மீது எந்தவிதமான தவறும் இல்லை, எல்லாம் தவறும் என் மீது தான் என்றாத்ரத. மேலும், கமிஷனர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயின் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேடட்டார்.
ஐ மிஸ் யூ: இந்நிலையில் நாஞ்சில் விஜயனின் பிறந்த நாளை முன்னிட்டு வைஷூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் கூறியுள்ளார். நீ நல்லா இருக்க வேண்டும். உன்னை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


Click it and Unblock the Notifications











