தளபதி ஆடும்போது.. மைக்கை தூக்கி போட்டுட்டு.. ஆட போய்ட்டேன்.. ஆர்.ஜே விஜய் !

சென்னை : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் வி.ஜே.விஜய்.

நடிகர் விஜயின் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. இந்த விழாவை முதல் முறையாக விஜய் மற்றும் பாவனா தொகுத்து வழங்கினார்கள். விஜய் எப்ஃ எம்மில் ஆர்.ஜேவாக இருந்து தற்போது தொலைக்காட்சியில் விஜே ஆகியிருக்கிறார். நிறைய படங்களில் ஆர்.ஜேவாகவே இவர் நடித்திருப்பார் . பலருக்கும் பிடித்தமான இவர் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியது பல ரசிகர்களால் பாராட்டபட்டது .

Vj vijay interview

விஜயின் இசை வெளியீட்டு விழாக்கள் எப்போதும் பிரம்மாண்டமான அரங்கங்களில் தான் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பினால் எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி மிகவும் சிறிய அளவிலான இடத்தில் வைக்கபட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் சில ரசிகர்களுடன் மட்டுமே நடைபெற்றது. இதற்காக மேடையிலே வருத்தம் தெரிவித்து இருந்தார் விஜய் .

நடிகர் விஜயை சிறுவயதில் இருந்தே தூரத்தில் பார்த்து இருக்கிறேன் ஆர்.ஜேவான பின் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது ஆனால், பேச முடியவில்லை. அதன் பின் பல முறை முயற்சிகள் செய்த்தும் பார்க்க முடியவில்லை. இத்தனை கால காத்திருப்புக்கு பின் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவையே தொகுத்து வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

Vj vijay interview

விஜயை கோர்ட்டில் பார்த்ததே இல்லை, அதை நான் மேடையில் விஜயிடம் கேள்வியாக முன் வைத்தேன் என கூறினார். இதற்கு விஜய் நண்பர் அஜித் போல கோர்ட் சூட் போட்டேன் என்று கூற அது பெரிய அளவில் டிரெண்டானது. மேடையில் விஜய் இதை கூறியதும் தொடர்ந்து 10 நிமிடங்கள் நிற்காமல் ரசிகர்கள் கைத்தட்டி, கூச்சலிட்டதாக வி.ஜே.விஜய் கூறியுள்ளார்.

Vj vijay interview

மாஸ்டர் விழாவில் தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்த நடனமாடினார் அந்த நடனமும் பெரிய அளவில் டிரென்டானது. அப்போது விஜய் ஆடும் போது வி.ஜே.விஜய்க்கு உற்சாகம் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த மைக்கை எல்லாம் தூக்கி போட்டு விட்டு தளபதியின் அருகே சென்று விட்டாராம்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பிரிட்டோ அதிக நேரம் பேசியது ரசிகர்களால் கிண்டல் செய்யபட்டது. இதற்கு பதிலளித்த வி.ஜே.விஜய், சேதுபதியே இதற்கு பதில் கூறிவிட்டார் தயாரிப்பாளருக்கு நிறைய அனுபவமும் அறிவும் இருக்கிறது இதனால் தான் அவர் பொங்கி வெளியேறும் நீரை போல பேசி தள்ளியிருக்கிறார் இதை நல்ல முறையில் எடுத்து கொள்ளுங்கள் என்றார் . தற்போது வி.ஜே.விஜய் பல தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

More from Filmibeat

Read more about: vijay anchor விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X