வேகமாக மோதிய கார்கள்.. பாடகர் விஜய் யேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது எப்படி?
கொச்சி: பிரபல பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். பின்னணி பாடகராக இருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இனிமை பாடல்கள்
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். இதற்காக மலையாளம், தமிழ், தெலுங்கில் பல விருதுகளை பெற்றுள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார்.

படைவீரன் ஹீரோ
இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தனசேகரன் இயக்கிய இந்தப் படத்தில் அமிர்தா ஐயர் ஹீரோயின். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்.

துராவூர் ஜங்க்ஷன்
இவர் திங்கட்கிழமை இரவு, 10 மணியளவில் கொல்லத்தில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார். ஆழப்புழாவில் இருக்கும் துராவூர் ஜங்க்ஷன் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

கடுமையான சேதம்
மோதிய வேகத்தில் இரண்டு கார்களின் முன் பகுதியில் கடுமையாக சேதம் அடைந்தது. கார்களில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இவர் புதிய பிசினஸ் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

மரியாதை இல்லை
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், 'மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதனால் மலையாள சினிமாவில் இனி பாடப் போவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன் என விஜய் யேசுதாஸ் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











