கணவர் என்னை பலாத்காரம் செய்தாரா?: பிக் பாஸ் பிரபலம் விளக்கம்
மும்பை: தன் கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோபியா ஹயாத்.
பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் ரோமானியாவை சேர்ந்த தனது கணவர் விளாட் ஸ்டானெஸ்குவை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்டானெஸ்கு சோபியாவை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

வீடு
என் கணவர் என் பணத்தில் தான் வாழ்ந்து வந்தார். இது விளாடுக்கு முதல் திருமணம் கிடையாது. அவருடைய முதல் மனைவியை நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு மோசமான பெண் என்று மட்டும் என்னிடம் கூறினார்.

பணம்
அவரின் முதல் மனைவி மூலம் மகன் இருக்கிறார். அந்த மகனை பார்க்க என் பணத்தில் தான் இங்கிலாந்தில் இருந்து ரோமானியா சென்று வந்தார். அவர் என் சொத்து பத்திரங்களை திருடியபோது பிடித்துவிட்டேன்.

திருட்டு
அவர் முன்னதாக என் நகைகளை திருட முயன்றபோது அவரை மன்னித்துவிட்டேன். என் பணத்தில் வாழ்ந்ததும் இல்லாமல் சொத்துக்களையும் திருட முயன்றதை என்னால் மன்னிக்க முடியவில்லை.

உண்மை
விளாட் என்னை பலாத்காரம் செய்தது இல்லை. மேலும் அவர் ஒரு நாளும் என்னை அடித்து உதைத்தது இல்லை. நிறைய பொய் சொல்லியுள்ளார். என்னால் அவர் பிரபலமானார் என்று சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











