VOWELS – அன்பின் ஒரு நிலவரைபடம் ஐந்து காதல் கதைகளை அலசி ஆராய ரெடியா?
தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் 'VOWELS – An Atlas of Love' திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டது. இப்படத்தின் மையக்கரு ஆழமான ஐந்து காதல் கதைகள். உயிரில், உணர்வில், சுவாசத்தில் பிறக்கும் காதலை 'Vowels' என இத்திரைப்படம் வரையறுக்கிறது.
'VOWELS – An Atlas of Love' திரைப்படம் காதலின் பன்முகப் பரிமாணங்களை விவாதிக்கிறது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, அன்பு முதல் ஆசை வரை, உணர்வுகளுக்கு அடிபணிவது வரை என காதலின் இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் போன்ற இருபக்கங்களையும் பேசுகிறது.

மொழியின் உயிரெழுத்துகள் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உணர்வுகளை வெளிப்படுத்துவது போல், 'VOWELS – An Atlas of Love' ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலைப் பேசுகிறது. ஒவ்வொரு கதையும் ஓர் உயிரெழுத்தையும், அதனோடு இணைந்த உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.
'A' – ஈர்ப்பு (Attraction): முதல் பார்வையிலேயே காதல், உண்மை, இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு. 'E' – உணர்ச்சி (Emotion): ஆழமான பிணைப்பு, தியாகம், ஏக்கம், பிரிவு. 'I' – நெருக்கம் (Intimacy): உடல் மற்றும் மனரீதியான பிணைப்பு, ஆசை, பற்றுதல், பலவீனம்.
'O' – பிடிவாதம் (Obsession): இருண்ட காதல், குற்றம், தனக்கு மட்டுமே என்ற உணர்வு, த்ரில்லர். 'U' – நிபந்தனையற்ற காதல் (Unconditional Love): கட்டுப்பாடுகளற்ற தூய அன்பு, கற்பனை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு.
ஒரு வரைபடத்தைப் (Atlas) போலவே, இத்திரைப்படக் கதைகள் தனித்துவமான உணர்வுகளைப் பேசுகின்றன. நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் போன்ற பல உணர்வுகளையும் இது அழகான காதலாகச் சித்தரிக்கிறது. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து (தெலுங்கு புகழ்), பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர், அருள் குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ராஜு ஷெரேகர் (தயாரிப்பாளர்), கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி (ஒளிப்பதிவு), சரவண சுப்பிரமணியம் (இசை), ஹரிஷ் கொம்மே (படத்தொகுப்பு), எம். கே. மதி (கலை இயக்கம்) ஆகியோர் இணைந்துள்ளனர்.
“ஐந்து உயிரெழுத்துகள்! ஐந்து கதைகள்!! ஒரே காதல் உலகம்!!!”


Click it and Unblock the Notifications











