சிம்பு மாறினாலும், அவர் ராசி மாறாது போலயே!

சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் பட டீசர் இன்று ரிலீசாகியுள்ளது.

Recommended Video

வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர் விமர்சனம்- வீடியோ

சென்னை: சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் பட டீசர் சொன்ன நேரத்துக்கு ரிலீசாகாமல், சற்று தாமதமாக ரிலீசானது.

படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வருவதில்லை, சொன்ன தேதியில் நடித்துக் கொடுப்பதில்லை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் சிம்பு. இதனால் அவரது படவாய்ப்புகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. பின்னர் தான் மாறிவிட்டதாக அறிவித்தார் சிம்பு.

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தபோது, அவருடன் நடித்த சக நடிகர்கள், 'சிம்பு சரியான நேரத்திற்கு வந்து, சொன்னபடி நடித்துக் கொடுக்கிறார்' என பாராட்டுப் பத்திரம் வாசித்தனர். இதனால் அடுத்தடுத்து பல படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

பொங்கல் ரிலீஸ்:

அவற்றில் ஒன்று தான், சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம். செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு பேசிய பிரபல வசனமே இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது. இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்:

ரசிகர்கள் ஏமாற்றம்:

இந்நிலையில், லைகா தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் ரஜினியின் 2.0வுடன் ரிலீசாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி வெளியிடப்படவில்லை. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

டிரெய்லர் ரிலீஸ்:

டிரெய்லர் ரிலீஸ்:

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டீசரில் இடம்பெறும் தனது கெட்டப்புகள் குறித்து நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை சிம்பு வெளியிட்டிருந்தார். இதனால் டிரெய்லர் குறித்த ஆர்வம் அவரது ரசிகர்களிடையே அதிகரித்தது.

தாமதமாக வெளியானது:

தாமதமாக வெளியானது:

இதனால், விஆர்வி டீசர் ஆர்வமாக இன்று காலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், சொன்ன நேரத்தில் டீசர் வெளியிடப்படவில்லை. தொழில்நுட்பப் பிரச்சினைகளால் சற்று தாமதமாகவே டீசர் ரிலீசானது. இந்த தாமதத்தால் படமாவது சொன்னபடி பொங்கலுக்கு ரிலீசாகுமா என்ற சந்தேகம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சிம்பு ராசியா?

சிம்பு ராசியா?

சிம்பு பழைய படி இல்லாமல் சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து, நடித்துக் கொடுத்தாலும், அவரது டீசர் சொன்னபடி ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது. சிம்பு மாறினாலும், அவரது ராசி மாறவில்லையே என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X