ஆசை, ஆசையாய் 2.0 டிக்கெட் வாங்கிச் சென்று ஏமாந்த சிம்பு ரசிகர்கள்
Recommended Video

சென்னை: 2.0 படம் பார்க்க சென்ற சிம்பு ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
ஷங்கரின் பிரமாண்ட படைப்பான 2.0 இன்று ரிலீஸாகியுள்ளது. 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் பட டீஸரை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டது.
திட்டமிட்டபடியே 2.0 படத்தின் இடைவேளையின் போது சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
சிம்பு
2.0 படத்தின் இடையே சிம்பு பட டீஸரை பார்த்த ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தான். ஆனால் இன்னும் யூடியூபில் டீஸர் வராததால் சிம்பு ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

வந்தா ராஜாவாதான் வருவேன்
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இது பேட்ட-விஸ்வாசம் பொங்கல் மட்டும் அல்ல எஸ்.டி.ஆர். பொங்கலும் கூட.
ஏமாற்றம்
சிம்பு பட டீஸரை பார்க்கும் ஆசையில் 2.0 படம் பார்க்க சென்ற பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குஷ்பு
வந்தா ராஜாவாதான் வருவேன் பட டீஸரை யூடியூபில் வெளியிடுமாறு லைகா நிறுவனத்திடம் கூற வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் குஷ்புவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபம்
முன்னறிவிப்பு எதுவும் இன்றி வந்தா ராஜாவாதான் வருவேன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு எங்களை அதிருப்தி அடைய செய்தீர்கள். தற்போது 2.0 படத்தின் இடையே வெளியாகும் என்று கூறிய விஆர்வி டீஸர் பல தியேட்டர்களில் வெளியாகவில்லை. லைகா நிறுவனம் மோசம் என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். #VRVTeaser


Click it and Unblock the Notifications











