விஜய் 63... அஜீத் 59 மாதிரி .. VSP 33.. விஜய் சேதுபதியும் டிரெண்டிங்கில்!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்

படத்தின் பெயரை வைப்பதற்குள் நடிகர்களின் எத்தனையாவது படம் என்கிற எண்ணிக்கையை வைப்பது அண்மை காலமாகவே டிரெண்டிங்கில் இருந்து வருது.

இந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33

அமலாபால் விஜய் சேதுபதி

அமலாபால் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி அமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர்.

மிகப்பிரமாண்ட தயாரிப்பு

மிகப்பிரமாண்ட தயாரிப்பு

இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார். பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இசைக் கலைஞராக விஜய்சேதுபதி

இசைக் கலைஞராக விஜய்சேதுபதி

தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்திருக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார்.

தற்காலிகமாக VSP 33

தற்காலிகமாக VSP 33

இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
VSP 33 யில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X