யாதும் ஊரே யாவரும் கேளீர்.. கணியன் பூங்குன்றனார் பாடலை தலைப்பாக மாற்றிய விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதியின் 33வது படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் கை நிறைய படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ தான் என்றில்லாமல், வில்லன், சிறப்பு தோற்றம் என அனைத்து விதமான ரோல்களை செய்து வருகிறார்.
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இதைத்தவிர ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் வில்லன், தெலுங்கு படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார் அவர்.

வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விஜய் சேதுபதியின் 33வது படமாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் வாக்கியம் சங்கக்கால புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் இடம்பெற்ற வாக்கியமாகும். அதாவது, எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே என்பது தான் இந்த வரியின் அர்த்தமாகும்.


Click it and Unblock the Notifications











