“உயிரோட விட்டதுக்கு காரணம் இருக்கு முத்து”: ட்ரெண்டாகும் சிம்புவின் VTK செகண்ட் பார்ட் லீட்

சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியனது.

கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்னீக் பீக் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

வாகை சூடிய வெந்து தணிந்தது காடு

வாகை சூடிய வெந்து தணிந்தது காடு

மூன்றாவது முறையாக சிம்பு, கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்தனர். இந்தமுறை எழுத்தாளர் ஜெயமோகனும் இக்கூட்டணியில் புதிதாக இணைந்தார். 'நதிகளில் நீராடும் சூரியன்' என தொடங்கப்பட்ட திரைப்படம், இறுதியாக 'வெந்து தணிந்தது காடு' என உருமாறியது. சிம்புவின் முத்துவீரன் என்ற கேரக்டர், மும்பை சென்று எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே படத்தின் ஒன்லைன். வழக்கமான கேங்ஸ்டர் படங்களைப் போல இல்லாமல், மேக்கிங்கில் வெரைட்டியாக வெளியான வெந்து தணிந்தது காடு, சிறப்பான வரவேற்பை பெற்றது.

இது முதல் பாகம் தான்

இது முதல் பாகம் தான்

வெந்து தணிந்தது காடு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கவுதம் மேனன், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டை ரசிகர்கள் முன்னிலையில் கூறினார். அதாவது தற்போது வெந்து தணிந்தது காடு முதல் பாகம் தான் வெளியாகிறது, இதுக்கு முடிவே கிடையாது. விரைவில் இரண்டாம் பாகம் உருவாகும் எனக் கூறியிருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு கேங்ஸ்டராகும் வரை மட்டுமே இருந்தது. மும்பை டான் ஆனபிறகு சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இரண்டாம் பாகத்தில் தான் பார்க்க முடியும்.

இரண்டாம் பாகத்திற்கான ஸ்னீக் பீக்

இரண்டாம் பாகத்திற்கான ஸ்னீக் பீக்

வெந்து தணிந்தது காடு முதல் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் 2ம் பாகத்தை தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கவுதம் மேனன் இருவரும் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான லீடாக ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், முதல் பாகத்தில் சிம்புவை கொலை செய்ய வரும் ஜாஃபர், "உன்ன உயிரோட விட்டதுக்கு காரணம் இருக்கு முத்து" என சிம்புவிடம் போனில் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

வெறித்தனமான ஆக்சன் ட்ரீட் கன்ஃபார்ம்

வெறித்தனமான ஆக்சன் ட்ரீட் கன்ஃபார்ம்

அதேபோல், முதல் பாகத்தில் சிம்புவின் நண்பனாக வரும் மலையாள நடிகர் நீரஜ் மாதவின் ஸ்ரீதர் கேரக்டர், கையில் துப்பாக்கியுடன் சிம்புவை தேடி வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு காட்சிகளும் இரண்டாம் பாகத்தில் சிம்புவுக்கு வில்லனாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல், முதல் பாகத்தை விடவும் செகண்ட் பார்ட்டில் அளவுக்கதிகமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது.

சிம்புவின் ஆசையும் அதே தான்

சிம்புவின் ஆசையும் அதே தான்

வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில், இரண்டாம் பாகத்தில் ஆக்சன் காட்சிகள் இன்னும் அதிகமாக இருக்குற மாதிரி கதை பண்ணுங்க என, சிம்புவும் ஐசரி கணேஷும் கவுதம் மேனனிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வெந்து தணிந்தது ஸ்னீக் பீக், சிம்புவின் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X