பீஸ்ட் படத்தில் ஸ்கோர் செய்யும் விடிவி கணேஷ், செல்வராகவன்... ரசிகர்கள் பாராட்டு!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது பீஸ்ட். இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. படம் அதிகமான வசூலை எட்டிவிடும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.
Recommended Video

ரிலீசானது பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தை அதிகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆயினும் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க முடிந்தது. அதிகாலை 4 மணிக்கு படத்தின் முதல் ஷோ திரையிடப்பட்ட நிலையில், நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் காத்திருந்து முதல் நாள் முதல் ஷோவை பார்த்தனர்.

ஸ்லோவான முதல் பாதி
படம் முதல் பாதியில் ஸ்லோவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது பாதியில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் கடைசி 20 நிமிடங்கள் சொதப்பலான க்ளைமாக்ஸ் காட்சிகளையே பார்க்க முடிந்தது என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. படத்தில் வில்லன் ரோல் சிறப்பாக அமைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

காமெடியை நம்பிய நெல்சன்
மாலிற்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைக்கப்படவில்லை என்றும் வழக்கம்போல நெல்சன் திலீப்குமார் காமெடியை மட்டுமே மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தை விஜய் மட்டுமே தலையில் ஏற்றி சுமக்கிறார் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பான டைமிங் காமெடி
படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால், சிறப்பான டைமிங் காமெடிதான். வழக்கமான கடத்தல் கதைதான் என்றால் அதை சிறப்பான காட்சிகள் மற்றும் காமெடி மூலம் சிறப்பாக்கியுள்ளார் நெல்சன். அந்த வகையில் அவரை பாராட்டலாம். ஆனால் விஜய் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து படம் செய்துள்ள அவர் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார் என்றே கூறவேண்டும்.

சிறப்பான விடிவி கணேஷ்
தனது முந்தைய படங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்களை வைத்து காமெடி கலாட்டா செய்த நெல்சன், இந்தப் படத்தில் விடிவி கணேஷை வைத்து சிறப்பாக காமெடி காட்சிகளை அமைத்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை விடிவி கணேஷும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ஸ்கோர் செய்த செல்வராகவன்
இதேபோல போல இயக்குநர் செல்வராவனின் நடிப்பில் முதல் படமாக பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. அவரும் சிறப்பான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது நடிப்பு அனைவரின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது. இதேபோல படத்தில் அழகான பூஜா ஹெக்டேவும் ஸ்கோர் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











