விஜய்யின் அந்த படத்தை 20 முறை பார்த்தவரைப் பார்த்து நான் 'த்தூ'னு துப்பிட்டேன்.. VTV கணேஷ் நக்கல் பேச்சு!
சென்னை: நடிகர் கவின், பிரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிஸ். இந்த படத்தை நடன இயக்குநர் சதீஷ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ப்ரோமோசன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் படத்தில் நடித்த VTV கணேஷ் பேசுகையில் பீஸ்ட் படத்தில் சதீஷ் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், " நான் நடித்து ரசிகர்களை சம்பாதிப்பதை விடவும், த்தூ என்று துப்பியதால் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளேன். தெலுங்கு திரையுலகில் எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற எனது டயலாக்கான "இங்க என்ன சொல்லுது.. ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி சொல்லுதா" என்ற டயலாக்கை விடவும் எனக்கு அதிக ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது, த்தூ என்று நான் சதீஸைப் பார்த்து துப்பியதற்கு எனக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.

விடிவி கணேஷ்: இதற்கு நான் விஜய் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பீஸ்ட் படத்தில் ஒரு லிஃப்ட் சீன். நானும் டான்சர் சதீஷும் அதாவது அவர் அப்போது டான்சர், இப்போதுதான் அவர் இயக்குநர். அந்த காட்சியில் இயக்குநர் நெல்சனிடம், டேய் நெல்சா எனக்கு ஏதாவது ஒரு டயலாக் குடுடா என்று கேட்டேன். இதை விஜய் சார் கேட்டுவிட்டார். உடனே விஜய் சாரும் நெல்சன் அவருக்கு ஒரு டயலாக் கொடுங்க என்று கூறிவிட்டார். உடனே நெல்சனும் என்னைப் பார்த்து யோவ் ஏதாவது சொல்லுயா என்று சொல்லிவிட்டார். நானும் என்ன சொல்வது என்று கேட்டேன். அந்த காட்சியில் அங்கங்கு கேமரா உள்ளது.
துப்பிட்டேன்: உடனே நான் எனக்கு பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சதீஷிடம், டேய் சதீஷ் என்னைப் பார்த்து எதாவது சொல்லு நான் அதற்கு கவுன்ட்டர் அடிக்கிறேன் என்று சொன்னேன். நாங்கள் வில்லன் கைகளால் சாகப்போகிறோம், அப்படி இருக்கையில் சதீஷ் காமெடி செய்வார். உடனே நான் சாகும்போது கூட இப்படி காமெடி பண்றியே நீ சாதாரண குழந்தை இல்லை தெய்வீக குழந்தைனு சொல்லிவிட்டு, துப்புவேன். ஒருமுறை ஏர்போர்ட்டில் ரசிகர் ஒருவர் வந்து, இந்த காட்சியைக் குறிப்பிட்டு பேசினார். மேலும், நீங்கள் தெய்வீகக் குழந்தை என்று சொல்லிவிட்டு, அடுத்து துப்புவீர்கள் அதுதான் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் அதை மட்டும் 20 முறை பார்த்தேன் என்று கூறினார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்: நான் உடனே அவரைப் பார்த்து த்தூ என்று துப்பிவிட்டு வந்துவிட்டேன் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். இவரது வீடியோவைப் பார்த்த பலரும் விளையாட்டாக கமெண்ட் போட்டும் வருகிறார்கள். அதாவது, துப்பும் அளவுக்கு பீஸ்ட் படம் ஒன்றும் கேவலமாக இருக்காதே, படம் நல்லாத்தானே இருக்கும் என்று பதிவிட்டு வருகிறார்கள். செய்தியாளர் சந்திப்பில் இவரது பேச்சைக் கேட்டு கிஸ் படத்தின் மொத்த படக்குழுவும் சிரி சிரி என சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











