VTV Ganesh: நெல்சனை மிஸ் செய்வேன் என கூறிய தலைவர்.. விடிவி கணேஷ் வெளிப்படை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.
இந்தப்படத்தின் சூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆகியவை நிறைவடைந்து ரிலீசுக்கு மாஸாக தயாராகி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நெல்சனை மிஸ் செய்வேன் என கூறிய ரஜினி: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்தப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், சிவராஜ்குமார் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக படத்தின் பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக தமன்னா, ரஜினி ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ஹுகும் பாடலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சரியான வரவேற்பை பெறாத நிலையில், ஜெயிலர் படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
நேற்றைய தினம் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ரஜினி, நெல்சன் உள்ளிட்டவர்களின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வழக்கம்போல குட்டிக் கதையுடன் தன்னுடைய பேச்சை சிறப்பாக்கினார் ரஜினிகாந்த்.
இந்த நிகழ்ச்சி நாளைய தினம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நிகழ்ச்சியில் விடிவி கணேஷ், காலையிலேயே சூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினிகாந்த் வந்துவிடுவார் என்றும் ஆனால் அவர் கேரவனுக்கு ஒருபோதும் செல்ல மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். வெளியில் மிகவும் வெப்பமாக இருப்பதாக தான் கூறினால், இங்கதான் உட்காரணும், இதுதான் நேச்சுரல் லைட் என்று அவர் கூறுவார் என்றும் விடிவி கணேஷ் பாராட்டு தெரிவித்தார்.
ஜெயிலர் சூட்டிங்கின் இறுதிநாளில் தான் நெல்சன் திலீப்குமாரை மிகவும் மிஸ் செய்வேன் என்று ரஜினி கூறியதாகவும் விடிவி கணேஷ் தெரிவித்தார். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தளபதி விஜய்க்கு பிறகு ரஜினிதான் செட்டில் மிகவும் ஒழுக்கமாக இருப்பவர் என்றும் விடிவி கணேஷ் குறிப்பிட்டுள்ளார். விடிவி கணேஷின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











