சோனமுத்தா போச்சா.. தளபதி 69 கதையை உளறிய விடிவி கணேஷ்.. மைக்கை பிடுங்கி ஓடவிட்ட பிரபல இயக்குநர்!

ஹைதராபாத்: வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்தி வஸ்துன்னாம் படம் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய காமெடி நடிகர் விடிவி கணேஷ் தளபதி 69 படம் பற்றி மேடையில் பேச, அவரை பேச விடாமல் இயக்குநர் அனில் ரவிப்புடி செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் தளபதி 69 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அந்த படத்தின் கதை குறித்த தகவலை விடிவி கணேஷ் மேடையில் பேசிய நிலையில் தான் அவரை இயக்குநர் அனில் ரவிப்புடி தடுத்துவிட்டார்.

vijay thalapathy 69 bhagavanth kesari 69


எப்படி இருந்தாலும், தளபதி 69 படத்தின் கதை இதுதான் என்பது ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது என பலரும் சோனமுத்தா போச்சா என ட்ரோல் செய்து வருகின்றனர்.

விடிவி கணேஷை தடுத்த அனில் ரவிப்புடி: பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கியுள்ள சங்கராந்தி வஸ்துன்னாம் படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் போலீஸ் கெட்டப்பில் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடிவி கணேஷ் தளபதி விஜய் பகவந்த் கேசரி படத்தை 5 தடவை பார்த்துவிட்டு அனில் ரவிப்புடியிடம் அதை ரீமேக் பண்ணலாம் என்று விஜய் கேட்டதாக பேசினார். உடனடியாக மேடையில் இருந்த அனில் ரவிப்புடி விடிவி கணேஷை தடுத்து நிறுத்தி தளபதி 69 படத்தை இயக்க விஜய் சந்தித்து பேசியது உண்மை தான். அவர் ரொம்பவே சூப்பரான கேரக்டர். தளபதி 69 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் அந்த படத்தின் கதையை சொல்வது சரியல்ல. அதனால் தான் விடிவி கணேஷ் சாரை தடுத்தேன் என மேடையிலேயே விளக்கம் கொடுத்துள்ளார். தளபதி 69 படம் பகவந்த் கேசரி ரீமேக்கா அல்லது வேறு கதையா என்பது தெரியாமல் பேசக்கூடாது என்றார்.

பகவந்த் கேசரி படம் தானா?: கடந்த 2023ம் ஆண்டு பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தை அனில் ரவிப்புடி இயக்கி இருந்தார். அந்த படத்தின் ரீமேக் தான் தளபதி 69 என ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், விடிவி கணேஷின் பேச்சும் அவசர அவசரமாக அவரை தடுத்த அனில் ரவிப்புடியின் நடவடிக்கையும் பகவந்த் கேசரி படத்தைத் தான் எச். வினோத் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார் என்பது உறுதியாகி விட்டது.

ரீமேக் நாயகன்: மலையாள படங்கள், தெலுங்கு படங்கள் ஏன் ஹாலிவுட் படங்களை கூட ரீமேக் செய்து ஹிட் கொடுத்து வரும் ரீமேக் நாயகனாக உள்ள தளபதி விஜய் நிச்சயம் பகவந்த் கேசரி படத்தையே பண்ணினாலும் கோலிவுட்டில் ஹிட் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் பகவந்த் கேசரிக்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர். அந்த டேங்கர் லாரி உடைத்துக் கொண்டு வரும் காட்சி எல்லாம் இங்கே விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்றும் பகவந்த் கேசரியே ஒரு சுமாரான படம் தான். அதை ஏன் ரீமேக் செய்து நடிக்கிறார் விஜய் என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். கண்டிப்பாக அந்த படத்தை வைத்துக் கொண்டு விஜய்யால் 1000 கோடி வசூலை சாத்தியமாக்க முடியுமா என்பது டவுட்டு தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X