Leader: அறந்தாங்கி நிஷாவுக்கு விவஸ்தையே இல்லையா.. லீடர் இசை வெளியீட்டு விழாவில் திட்டிய VTV கணேஷ்
சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் லீடர். லீடர் படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து, ஷியாம், லால், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பயல் ராஜ்புத், பிரபாகரன், அமிர்தா ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, "ஆதித்யா" கதிர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணன் படத்தை தயாரித்து நடித்துள்ளார்.
படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்தும் அதில் பணியாற்றியது குறித்தும் பேசினர். அதேபோல் படத்தில் நடித்த அறந்தாங்கி நிஷா பேசுகையில், அவரும் ஜெலண்ட் சரவணனும் இணைந்து என்ன எல்லாம் பேசிக் கொண்டார்கள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் படத்தில் நடிக்க வந்தபோது, தானும் அவரது கணவரும் ஜாலியாக ஊர் சுற்றினோம் என்று கூறினார்.

விளாசிய விடிவி கணேஷ்: அதன் பின்னர் பேச வந்த நடிகர் VTV கணேஷ் காட்டமாக அறந்தாங்கி நிஷாவை காட்டமாக விமர்சித்தார். அதாவது, " ஒரு சின்ன குழந்தை எவ்வளவு அழகாக படத்தில் பணியாற்றிய அனைவரையும் குறிப்பிட்டு பேசியது. ஆனால் அந்த பெண் அறந்தாங்கி நிஷா படத்தை பற்றி எதுவுமே பேசாமல், அடுத்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். கொஞ்சமாவது வெவஸ்தை வேண்டாமா? அதைக் கேட்டாலே நமக்கு சிரிப்பாக வந்தது. இது மட்டும் இல்லாமல், அவரது கணவரும் நடித்தார் என்றும், 15 நாட்கள் சும்மா வந்து சென்றார் என்றும் கூறினார். இதையெல்லாம் யாருமே கேட்கலையே" என்று காட்டமாக விமர்சித்தார். இவர் இவ்வாறு விமர்சித்தது பேசு பொருளாகி உள்ளது.
விமர்சனம்: தமிழ் திரையுலகில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பலரும் படத்தின் இசையமைப்பாளர் குறித்தும் அவரது வேலை குறித்தும் பேசுவது என்பது மிகவும் குறைவு. பலரும் அந்த படத்தின் கதாநாயகன் அல்லது இயக்குநர் புகழை தான் அதிகம் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற விமர்சனம் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. அதேபோல் கதாநாயகர்களும் படத்தை பற்றி பேசி, மக்களை படத்தை பார்க்க தியேட்டரை நோக்கி வரவைப்பதற்கான காரணத்தை சொல்லாமல், தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று செல்ஃப் பில்டப் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், VTV கணேஷ் இவ்வாறு விமர்சித்தை பலரும் விவாதித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











