Kalki 2898 AD: தயவு செஞ்சி அதமட்டும் பண்ணிடாதீங்க.. கடைசி நேரத்தில் கல்கி படக்குழு கோரிக்கை!

ஐதராபாத்: நடிகர்கள் பிரபாஸ், அமிதாபச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD. இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங்கிலும் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்ந்துள்ளன.

முன்னதாக படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகள், ப்ரமோஷன்கள் சிறப்பாக நடந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட இவை மிகப் பெரிய அளவில் துணை புரிந்துள்ளன. இந்நிலையில் தற்போது பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ரசிகர்களிடையே முக்கியமான கோரிக்கை ஒன்றை கடைசி நேரத்தில் வெளியிட்டுள்ளது.

Kamal haasan Prabhas Amitabh bachan

கல்கி 2898 AD படம்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கல்கி 2898 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெயிலர்களில் அவரது லுக் வெளியாகி மிகப்பெரிய அளவில் இந்த கேரக்டருக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் தனது கெட்டப் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் நாக் அஸ்வினிடம் கேட்டதாகவும் இருவரும் இணைந்து இந்த கேரக்டர் லுக்கை உருவாக்கியதாகவும் கமல் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த அட்ராக்ஷன்கள்: இந்த படத்தில் அடுத்த அட்ராக்ஷனாக நடிகர் அமிதாப் பச்சன் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். அவரது லுக்கும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முகத்தில் நெற்றிக்கண்ணுடன் காணப்படும் அவரது கேரக்டர் அதிரடி சரவெடியாக அதிகமான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டதாக காணப்படுகிறது. டிரைலரிலேயே அவரது முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள சந்தோஷ நாராயணனும் படத்தில் பிரபாஸுக்கும் அதேபோல பிளாஷ் பேக்கில் வரும் காட்சிகளுக்கும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றபடி இசையமைத்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் கோரிக்கை: இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. நாளைய தினம் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படம் 400 கோடிகளுக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நாளைய தினம் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்பாய்லர்ஸ் மற்றும் பைரசிக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரையிலான அனைத்து படங்களும் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையாக ஸ்பாய்லர்ஸ் மற்றும் பைரசி காணப்படுகிறது.

Kamal haasan Prabhas Amitabh bachan

Spoilers & Piracy: ஒரு சில விஷயங்களை படங்களில் சஸ்பென்சாக படக்குழுவினர் வைத்து வரும் சூழலில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் இதே போல படத்தின் முதல் காட்சி வெளியான உடனே மொத்த படமும் வெளியாவதும் படத்தின் வசூலை பாதித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திரை துறையினர் மற்றும் பொழுதுபோக்கு துறையினர் 20 ஆயிரம் கோடி ரூபாய்களை இவற்றால் இழந்து வருவதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்காண்டுகளாக மிக அதிகமான மெனக்கெடல்களுடன் அதிகமான பொருட்செலவுடன் கல்கி 2898 ஏடி படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவிஸ் கடைசி நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X