Kalki 2898 AD: பண மழையில் பிரபாஸ்! ரூபாய் 1100 கோடி வசூலைப் போட்ட கல்கி 2898 ஏ.டி!
சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. படம் ரிலீஸான முதல் நாளே ரூபாய் 191.5 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இதில் முன்பதிவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 40 கோடி வசூல் செய்தது. மேலும் வட அமெரிக்காவில் மட்டும் படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூபாய் 100 கோடியை அள்ளியது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென், தீஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் மகாபாரதக் கதையைத் தழுவி எதிர்கால அறிவியல் வளர்ச்சியை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படம் 3டி மற்றும் ஐமேக்ஸிலும் வெளியானது.

படம் முதல் நாளே இந்தியா முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டன. இது மட்டும் இல்லாமல் படத்தினை தயாரித்த வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக ரூபாய் 600 கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆந்திராவில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. மும்பையில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 2300 வரை விற்பனை செய்யப்பட்டது.
1100கோடி வசூல்: படம் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 1100 இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது. மேலும் பிரபாஸ் ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் வேகமாக பகிர்ந்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
1000 கோடி வசூல் வேட்டை: ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் ரூபாய் 1500 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது. அதன் பின்னர் வந்த சலார் படம் ரூபாய் 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. சலாருக்கு முன்னர் வெளியான ஆதிபுருஷ் ரூபாய் 500 கோடிகளைக் கூட வசூல் செய்யவில்லை. இந்நிலையில் கல்கி 2898 ஏ.டி. படம் ரூபாய் 1100 கோடிகளை வசூல் செய்து விட்டதால் பிரபாஸ் காட்டில் பணமழை என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தொடரும் வசூல்: படம் வெளியாகி ஒரு மாதத்தினை நிறைவு செய்யவுள்ளது என்றாலும் பல திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக்கொண்டுதான் உள்ளது. இதனால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் ஹிந்தியில் படம் வெளியான இடங்களில் இன்னும் ரிப்பீட் ஆடியன்ஸை வந்து கொண்டு இருப்பது படக்குழுவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











