»   »  சிக்ஸ் பேக்குக்கேவா, இன்னொரு லுக் இருக்காம்: அப்போ, அஜீத் டபுள் ரோலா?

சிக்ஸ் பேக்குக்கேவா, இன்னொரு லுக் இருக்காம்: அப்போ, அஜீத் டபுள் ரோலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தில் அஜீத்தின் மற்றுமொரு லுக் விரைவில் வெளியிடப்படும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

அஜீத் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அவர் சிக்ஸ் பேக்கில் மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்தது.


Wait for Another look of Ajith from Vivegam

இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவா விவேகம் பற்றி கூறுகையில்,


விவேகம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். பெரும் பொட்செலவில் படம் எடுக்கப்படுகிறது. திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அஜீத்தின் மற்றுமொரு லுக் வெளியிடப்படும்.


அந்த லுக் டீஸர் அல்லது ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பு ரிலீஸாகும். படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. படக்குழு விரைவில் பல்கேரியா செல்ல உள்ளது என்றார்.

English summary
Director Siva said that another look of Ajith from the upcoming movie Vivegam will be revealed soon.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil