கோச்சடையான் ட்ரெய்லர் கலக்கும் பாருங்க: சௌந்தர்யா அஸ்வின்
சென்னை: கோச்சடையான் ட்ரெய்லர் சூப்பராக இருக்கும் என்று இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தின் டீஸர் கடந்த 9ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் அந்த டீஸரை யூடியூப்பில் பார்த்துவிட்டனர்.

2 மில்லியன்
டீஸர் வெளியான 4 நாட்களுக்குள் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதை யூ டியூப்பில் பார்த்துள்ளனர்.

டீஸர் மொக்கை
டீஸரை பார்த்த ரஜினி ரசிகர்களில் பலருக்கு அது பிடிக்கவில்லையாம். இது என்ன தலைவர் வருவார் என்று பார்த்தால் பொம்மை வருது. படமும் இப்படி தான் இருக்கும் என்றால் முடியாதுப்பா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டீஸர் மொக்கை என்று கூறப்படுகிறது. மேலும் டீஸரில் ரஜினியின் குரலையே கேட்க முடியவில்லை என்ற ஆதங்கமும் ரசிகர்களுக்கு உள்ளது.

ட்ரெய்லர் வருது
கோச்சடையான் ட்ரெய்லர் நீளமானதாகவும், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும், முக்கியமாக ரஜினியின் வசனங்கள் அடங்கியதாகவும் வரும் என்று இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

படத்தில் 2 ஆஸ்கர் மன்னன்கள்
கோச்சடையான் படத்தில் ஆஸ்கர் விருது வாங்கிய இசையமைப்பாளர் ரஹ்மானும், சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











